நேற்று ஸ்டாலின் பழமொழிகள், இன்று அமித்ஷா உளறல்கள்: நெட்டிசன்களுக்கு கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Tuesday,March 27 2018]

கடந்த இரண்டு நாட்களாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 'யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே' என்றும் பூனை மேல் மதில் போல் என்றும் பழமொழிகளை மாற்றி சொன்னதால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானார். ஊரில் உள்ள அனைத்து பழமொழிகளையும் நெட்டிசன்கள் மாற்றி மாற்றி பதிவு செய்து ஸ்டாலின் பழமொழிகள் என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர்

இந்த நிலையில் இன்று கர்நாடக மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'ஊழல் நிறைந்த அரசு என்ற போட்டியை வைத்தால் அதில் எடியூரப்பாவின் அரசுதான் முதலிடம் பிடிக்கும்' என்று உளறினார். பின்னர் அருகில் இருந்தவர் தவறை சுட்டிக்காட்டியவுடன் சித்தராமையாவின் காங்கிரஸ் அரசு என்று சுதாரித்து கூறினார்.

அமித்ஷாவின் இந்த உளறலும் 'அமித்ஷா உளறல்கள்' என்ற பெயரில் ஹேஷ்டேக்காக உருவாகி இன்று டிரெண்டுக்கு வந்துள்ளது. நெட்டிசன்களுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கும் தினசரி ஒருவர் தீனி கொடுத்து கொண்டிருப்பதால் டுவிட்டர் எப்போதுமே பரபரப்பாகவே உள்ளது.