நேற்று ஸ்டாலின் பழமொழிகள், இன்று அமித்ஷா உளறல்கள்: நெட்டிசன்களுக்கு கொண்டாட்டம்

  • IndiaGlitz, [Tuesday,March 27 2018]

கடந்த இரண்டு நாட்களாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 'யானை வரும் முன்னே மணியோசை வரும் பின்னே' என்றும் பூனை மேல் மதில் போல் என்றும் பழமொழிகளை மாற்றி சொன்னதால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு ஆளானார். ஊரில் உள்ள அனைத்து பழமொழிகளையும் நெட்டிசன்கள் மாற்றி மாற்றி பதிவு செய்து ஸ்டாலின் பழமொழிகள் என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் டிரெண்டுக்கு கொண்டு வந்தனர்

இந்த நிலையில் இன்று கர்நாடக மாநிலத்தில் பாஜக தேசிய தலைவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'ஊழல் நிறைந்த அரசு என்ற போட்டியை வைத்தால் அதில் எடியூரப்பாவின் அரசுதான் முதலிடம் பிடிக்கும்' என்று உளறினார். பின்னர் அருகில் இருந்தவர் தவறை சுட்டிக்காட்டியவுடன் சித்தராமையாவின் காங்கிரஸ் அரசு என்று சுதாரித்து கூறினார்.

அமித்ஷாவின் இந்த உளறலும் 'அமித்ஷா உளறல்கள்' என்ற பெயரில் ஹேஷ்டேக்காக உருவாகி இன்று டிரெண்டுக்கு வந்துள்ளது. நெட்டிசன்களுக்கும் மீம்ஸ் கிரியேட்டர்ஸ்களுக்கும் தினசரி ஒருவர் தீனி கொடுத்து கொண்டிருப்பதால் டுவிட்டர் எப்போதுமே பரபரப்பாகவே உள்ளது.

More News

விஜய்யின் இந்த திடீர் மாற்றம் ஏன் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து தற்போது அவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் இன்னும் பெயர் வைக்கப்படாத படத்தில் நடித்து வருகிறார்.

கார்த்திக் நரேனிடம் நம்பிக்கை மோசடி செய்தது யார்? டுவீட் ஏற்படுத்திய பரபரப்பு

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய முதல்படமான 'துருவங்கள் 16' நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது அவர் 'நரகாசுரன்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் விரைவில் வெளிவரவுள்ளது.

டேட்டா லீக் எதிரொலி: ஃபேஸ்புக்கில் இருந்து விலகினார் பிரபல நடிகர்

சமீபத்தில் ஃபேஸ்புக் பயனாளிகளின் டேட்டாக்கள் இங்கிலாந்து நாட்டின் கேம்பிரிட்ச் அனாலிட்டிக்ஸ் நிறுவனத்தால் திருடப்பட்டு அவை அமெரிக்க அதிபர் தேர்தலில் பயன்படுத்தப்பட்டதாகவும்,

தமிழ் நடிகைக்கு சாமியார் அளித்த பரிசு

இந்தியாவின் அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் சமீபத்தில் பேரணி ஒன்றை நடத்தினார்.

கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு: காவிரி மேலாண்மை வாரியத்திற்கு சிக்கலா?

கர்நாடகா மாநிலத்தின் சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் முடிவடைதால், இன்று அம்மாநிலத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது.