நடிகை லேகா வாஷிங்டனை காதலிக்கும் அமீர்கானின் உறவினர்.. என்ன சொல்லியிருக்கார் பாருங்க..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் திரைப்படங்கள் நடித்துள்ள நடிகர்கள் லேகா வாஷிங்டனை காதலிப்பதாக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானின் உறவினர் ஒருவர் கூறியுள்ளார்.
தமிழில் ’காதலர் தினம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான லேகா வாஷிங்டன். அதன் பின்னர் ’உன்னாலே உன்னாலே’ ’ஜெயம் கொண்டான்’ ’வா’ ’கல்யாண சமையல் சாதம்’ ’அரிமா நம்பி’ உள்ளிட்ட படங்களில் நடித்தார். மேலும் இவர் தெலுங்கு, கன்னடம், இந்தி படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் ஒரே ஒரு ஆங்கில படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் லேகா வாஷிங்டனை அமீர்கான் உறவினர் நடிகர் இம்ரான் கான் காதலிப்பதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இது குறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார். என் வாழ்க்கையில் நேர்மறையான மற்றும் ஆரோக்கியத்தை லேகா வாஷிங்டன் ஏற்படுத்தினார். நான் மன அழுத்தத்தில் இருந்த போது எனக்கு உதவியாக இருந்தவர் அவர்தான். என்னை நன்றாக கவனித்துக் கொண்டதும் அவர்தான். அவர் இல்லாமல் ஒரு வாழ்க்கையை என்னால் தொடர முடியுமா என்று தெரியவில்லை’ என்று கூறியுள்ளார்.
இதனை அடுத்து லேகா வாஷிங்டனை நடிகர் இம்ரான் கான் காதலிப்பதை உறுதி செய்துள்ளதை அடுத்து இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout