ஏழைகளுக்கு ஒரு கிலோ கோதுமை மட்டுமே கொடுத்த அமீர்கான்: ஆனால் அதில் ஒரு ஆச்சரியம்!

  • IndiaGlitz, [Monday,April 27 2020]

கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு திரையுலகினர் பலர் தொடர்ந்து உதவிகள் செய்து வருகின்றனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கான் அவர்கள் ஏழை எளிய மக்களுக்கு ஒரு கிலோ கோதுமை வழங்குவதாக அறிவிப்பு செய்தது அனைவருக்கும் ஆச்சரியம் அளித்தது

ஒரு கிலோ கோதுமை மிகக் குறைந்த விலையில் இருக்கும் போது அதை மட்டுமே அமீர்கான் உதவி செய்வதாக அறிவித்துள்ளார் என்றும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் அமீர்கான் ஏழை எளியவர்களுக்கு வெறும் ஒரு கிலோ கோதுமை மாவு மட்டும்தான் உதவி செய்கிறாரா என்ற சர்ச்சையும் எழுந்தது

இதனை அடுத்து அந்த ஒரு கிலோ கோதுமை மாவை வாங்க பணக்காரர்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் செல்லவில்லை. ஏழை எளியவர்கள் மட்டுமே அந்த கோதுமையை வாங்கி சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கோதுமை மாவை வாங்கி வீடு திரும்பிய அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சப்பாத்தி செய்ய அதை எடுத்தபோது அந்த கோதுமை மாவு பாக்கெட்டில் ரூபாய் பதினைந்தாயிரம் இருந்ததை கண்டு ஆச்சரியமடைந்தனர்

ஒரு கிலோ கோதுமை மாவு மட்டுமே அறிவிப்பு என்றால் ஏழைகள் மட்டுமே வாங்குவார்கள் என்பதை அறிந்து இந்த அறிவிப்பை அமீர்கான் அறிவித்ததாகவும், இதனையடுத்து அவர் செய்யும் உதவிகள் யாருக்க்கு சேர வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் மிகச்சரியாக சென்றுள்ளதாகவும் அவரது தரப்பினர் தெரிவித்துள்ளனர். கோதுமை மாவு பாக்கெட்டில் ரூ.15 ஆயிரம் பணம் இருந்தது அந்த பாக்கெட்டை வழங்கியவர்களுக்க்கு கூட தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது

More News

அஜித் ரசிகருக்கு போய் சேர்ந்த விஜய் கொடுத்த உதவித்தொகை ரூ.5000!

தளபதி விஜய் கொரோனா தடுப்பு நிதியாக ரூ 1.30 கோடி ரூபாய் நிதியுதவி செய்தார் என்பது தெரிந்ததே அதுமட்டுமின்றி கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் வறுமையில் வாடும்

முதல்முறையாக மினிமம் கியாரண்டி இல்லாமல் வெளிவரும் விஜய்யின் 'மாஸ்டர்' 

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் படப்பிடிப்பின்போதே கிட்டத்தட்ட அனைத்து வியாபாரங்களும் முடிந்துவிட்டது என்பது தெரிந்ததே.

தமிழகத்தில் இன்று கொரோனா பாசிட்டிவ் எத்தனை பேருக்கு? சுகாதாரத்துறை தகவல்

தமிழகத்தில் இன்று புதிதாக 64 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும், சென்னையில் இன்று மட்டும் 28 பேருக்கு கொரோனா தொற்று பரவி இருப்பதாகவும் சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

ஜோதிகா அப்படி என்ன தவறாக கூறினார்? பிரபல நடிகை கேள்வி

சமீபத்தில் சினிமா விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை ஜோதிகா, தஞ்சை பெரிய கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நெட்டிசன்கள் ஒரு சிலர் சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக விமர்சனம் செய்தனர்.

உண்மையில் என்ன நடந்தது? கொரோனா பாதிப்பில் இருந்து குணமான பாடகி கனிகா கபூர்

மும்பையை சேர்ந்த பிரபல பாடகி கனிகா கபூர், இங்கிலாந்து நாட்டில் இருந்து திரும்பி வந்தபோது கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தாமல் தப்பிவிட்டதாகவும்,