அமீர்கானின் 'லால்சிங் சத்தா': முதல் நாள் வசூல் இவ்வளவு தானா? 2வது நாளே தியேட்டர் குறைப்பு!

ஒருபக்கம் தென்னிந்திய திரைப்படங்கள் சூப்பர் ஹிட்டாகி வரும் நிலையில் பாலிவுட் திரைப்படங்கள் தொடர் தோல்வி அடைந்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் அமீர்கான் நடிப்பில் உருவான ’லால்சிங் சித்தா’ மற்றும் அக்ஷய்குமார் நடிப்பில் உருவான ’ரக்ஷாபந்தன்’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் நேற்று வெளியாகின. இந்த படங்களுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் நேற்றைய முதல் நாள் ரக்ஷாபந்தன் திருவிழாவின் விடுமுறை நாளாக இருந்த போதிலும் இரண்டு படங்களுக்குமே பார்வையாளர்களின் கூட்டமில்லை என்று கூறப்படுகிறது.

லால்சிங் சத்தா’ திரைப்படத்திற்கு ஒரு சில திரையரங்குகளில் 10 முதல் 15 பார்வையாளர்கள் மட்டுமே இருந்ததாகவும் சில திரையரங்குகளில் முதல் நாள் காட்சியே ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும் ’லால்சிங் சத்தா’ திரைப்படம் 1300 காட்சிகள் முதல் நாள் நாடு முழுவதும் திரையிடப்பட்ட நிலையில் இரண்டாவது நாளே அது ஆயிரம் காட்சிகளாக குறைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அமீர்கானின் ’லால்சிங் சத்தா’ திரைப்படம் முதல் நாளில் மொத்தம் ரூ.10.75 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளதாகவும், அமீர்கானின் திரையுலக வாழ்வில் இதுதான் மிக குறைந்த முதல் நாள் வசூல் என்றும் கூறப்படுகிறது.