சீனாவின் நல்லெண்ண தூதரான பிரபல இந்திய நடிகர்
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்திய பிரதமர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் அவர் சீன அதிபரை சந்தித்து இருநாட்டு நல்லுறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் இந்திய, சீன உறவில் ஒரு புதிய திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சீன அரசு இந்தியாவுக்கான நல்லெண்ண தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தேர்வு செய்யபப்ட்டுள்ளார். அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ், பிகே மற்றும் டங்கல் ஆகிய படங்கள் சீனாவில் சூப்பர் ஹிட் ஆனதால் சீனாவிலும் அவர் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.
அமீர்கான் சீனாவின் நல்லெண்ண தூதராக நியமனம் செய்யப்பட்டது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹூ சின் இங் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'அமீர்கானை சீன மக்களுக்கு நன்கு தெரியும். நான் உட்பட சீனர்கள் பலரும் அவரது ரசிகர்கள் என்று கூறினார். அமீர்கானுக்கு கிடைத்த இந்த புதிய பதவிக்காக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments