சீனாவின் நல்லெண்ண தூதரான பிரபல இந்திய நடிகர்

  • IndiaGlitz, [Saturday,April 28 2018]

இந்திய பிரதமர் சீனாவுக்கு சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் அவர் சீன அதிபரை சந்தித்து இருநாட்டு நல்லுறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் இந்திய, சீன உறவில் ஒரு புதிய திருப்பம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சீன அரசு இந்தியாவுக்கான நல்லெண்ண தூதராக பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் தேர்வு செய்யபப்ட்டுள்ளார். அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ், பிகே மற்றும் டங்கல் ஆகிய படங்கள் சீனாவில் சூப்பர் ஹிட் ஆனதால் சீனாவிலும் அவர் பிரபலம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீர்கான் சீனாவின் நல்லெண்ண தூதராக நியமனம் செய்யப்பட்டது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் ஹூ சின் இங் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, 'அமீர்கானை சீன மக்களுக்கு நன்கு தெரியும். நான் உட்பட சீனர்கள் பலரும் அவரது ரசிகர்கள் என்று கூறினார். அமீர்கானுக்கு கிடைத்த இந்த புதிய பதவிக்காக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

பிரபல வெற்றிப்பட இயக்குனரின் படத்தில் விமல்-வடிவேலு

'மன்னார் வகையறா' படத்தின் வெற்றியால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ள நடிகர் விமல், தற்போது சற்குணம் இயக்கத்தில் 'களவாணி 2 மற்றும் முத்துகுமரன் இயக்கும் கன்னிராசி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்த் மிஸ் செய்த படத்தில் நடிக்கும் விஜய்சேதுபதி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ள படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடிக்கவுள்ளதாக செய்தி வந்து இரண்டு நாள் தான் ஆகியுள்ளது.

இன்று முதல் கார்த்தியின் புதிய அத்தியாயம்

கோலிவுட் திரையுலகின் இளையதலைமுறை நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவருடைய நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய 'கடைக்குட்டி சிங்கம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது.

அடுத்தடுத்த வாரங்களில் வெளிவரும் தமிழ்த்திரைப்படங்களின் பட்டியல்

வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் புதிய திரைப்படங்கள் வெளியாக தொடங்கிவிட்டன. கடந்த வாரம் 'மெர்க்குரி' படமும் இந்த வாரம் தியா, பக்கா மற்றும் பாடம் ஆகிய படங்களும் வெளியாகியுள்ளன

சென்னையில் எனக்கும் பாலியல் தொல்லை: நடிகை ரெஜினா

நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொல்லைகள் குறித்து கடந்த சில நாட்களாகவே கூறி கொண்டு வரும் நிலையில் ரெஜினா தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான நிகழ்வு குறித்து நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியுள்ளார்.