அமீர்கானுக்கு கொரோனா பாதிப்பு: உடன் நடித்த நாயகிக்கும் பாசிட்டிவ்!
- IndiaGlitz, [Wednesday,March 24 2021]
பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அவருடன் நடித்த பிரபல நடிகை ஒருவருக்கும் கொரோனா பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்துள்ளதால் பாலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நிதிஷ் திவாரி என்பவரின் இயக்கத்தில் அமீர்கான் தற்போது ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கைரா அத்வானி நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடந்து வந்த நிலையில் திடீரென அமீர்கானுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து அவர் தனது வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்
இந்த நிலையில் அமீர்கானுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து இந்த படத்தின் நாயகி கைரா அத்வானிக்கும் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் அவருக்கும் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதை அடுத்து அவரும் தனிமைப் படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்
அமீர்கான், கைரா அத்வானி ஆகிய இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அடுத்து பாலிவுட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பாலிவுட் திரையுலகின் பிரபலங்களான அமிதாப்பச்சன். ஐஸ்வர்யாராய் உள்பட பலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு குணமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.