தமிழ் பிரபலத்தின் பயோபிக்கில் நடிக்க பாலிவுட் பிரபல நடிகர் அமீர்கான் ஆர்வம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
செஸ் விளையாட்டில் இந்திய செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டதையும் 5 முறை உலகச் சாம்பியன்ஷிப் பட்டத்தையும் பெற்றுள்ள தமிழ்நாட்டு பிரபலம் விஸ்வநாதன் ஆனந்த் குறித்து பயோபிக்கில் எடுக்கப்பட்டால் தான் அதில் உறுதியாக நடிப்பேன் என்று பாலிவுட் பிரபல நடிகர் அமீர்கான் தெரிவித்து உள்ளார்.
கொரோனா நேரத்தில் பிரபலங்கள் பலரும் நன்கொடைகளைத் திரட்டி, அதை இயலாதவர்களுக்கு நிவாரணமாக வழங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் பாலிவுட் பிரபல நடிகர் அமீர்கான் அவர்கள் தனது செஸ் திறமையை வைத்து உலகச் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்துடன் மோதியுள்ளார். இந்த விளையாட்டில் கிடைக்கும் நிதியை வைத்து கொரோனா நேரத்தில் பாதிக்கப்பட்டுள்ள செஸ் விளையாட்டு வீரர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜுன் 13 ஆம் தேதி நடைபெற்ற இந்தப் போட்டியில் விஸ்வநாதன் ஆனந்துடன் பாலிவுட் நடிகர் அமீர்கான் விளையாடினார். மேலும் 4 முக்கியப் பிரபலங்கள் இந்த விளையாட்டில் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிகழ்வுகளை அடுத்து பாலிவுட் நடிகர் அமீர்கானை செய்தியாளர்கள் சந்தித்துப் பேசியுள்ளனர். அப்போது விஸ்வநாதன் ஆனந்த் குறித்து பயோபிக் எடுத்தால் அதில் நடிப்பீர்களா? எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதில் அளித்த நடிகர் அமீர்கான், நான் கண்டிப்பாக அந்த பயோபிக்கில் நடிப்பேன். எனக்கு ஓரளவு செஸ் தெரியும் என்றாலும் விஸ்வநாதன் ஆனந்த்தின் முழுமையான செஸ் அறிவை தெரிந்து கொண்டு அவருடைய பழக்க வழக்கங்களையும் உள்வாங்கிக் கொண்டு முழுமையாக நடிப்பேன். இப்படி செய்யும்போது அவருடன் இன்னும் நேரத்தை செலவழிக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இப்படி ஒரு விஷயம் நடக்க வேண்டும் எனக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். நடிகர் அமீர்கான் கொடுத்து இருக்கும் க்ரீன் சிக்னலை அடுத்து விஸ்வநாதன் ஆனந்தின் பயோபிக் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என நம்பலாம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Kiara Nithya
Contact at support@indiaglitz.com
Comments