ரஜினி ஏன் வாய்ஸ் கொடுக்கவில்லை. அமீர்கான் விளக்கம்
Send us your feedback to audioarticles@vaarta.com
அமீர்கான் நடித்துள்ள 'டங்கல்' திரைப்படம் வரும் 23ஆம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பிரமாண்டமாக வெளிவரவுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் தமிழ் பதிப்பில் தன்னுடைய கேரக்டருக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பின்னணி குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
ஆனால் ரஜினி இதற்கு மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள அமீர்கான், 'டங்கல்' படத்திற்கு ரஜினியின் குரல் பொருத்தமாக இருக்கும் என்று கருதி ரஜினியிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால் என்னுடைய முகத்திற்கு அவருடைய குரல் பொருந்தாது என்று ரஜினி கூறினார். அவர் கூறியதை நானும் ஏற்றுக்கொண்டேன். இருப்பினும் 'டங்கல்' படத்தை பார்த்து என்னுடைய கேரக்டரையும், படத்தையும் வெகுவாக பாராட்டினார்' என்று கூறினார்.
மேலும் தான் ரஜினியின் மிகப்பெரிய ரசிகன் என்றும் அவருடன் நடிக்க மிகுந்த ஆவலுடன் உள்ளதாகவும் அமீர்கான் தெரிவித்தார். ரஜினி நடித்து வரும் '2.0' படத்தை பார்க்க மிகுந்த ஆவலுடன் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களில் தானும் ஒருவன்' என்றும் அமீர்கான் மேலும் கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout