லிவிங் டுகெதர் வாழ்க்கைக்கு எண்ட்-கார்டு? திருமண தேதியை அறிவித்த அமீர்-பாவனி..!

  • IndiaGlitz, [Thursday,March 14 2024]

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி கடந்த சில மாதங்களாக லிவிங் டுகெதர் வாழ்க்கை நடத்தியதாக கூறப்பட்ட நிலையில் தற்போது இருவரும் அளித்த பேட்டியில் தங்களது திருமண தேதியை அறிவித்துள்ளனர்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளர்களாக கலந்து கொண்டவர்கள் அமீர் மற்றும் பாவனி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது இருவரும் காதலித்த நிலையில் வெளியில் வந்த பின்னரும் இருவரும் காதல் ஜோடியாக வலம் வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக அமீர் - பாவனி லிவிங் டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்தி வருவதாக கூறப்பட்ட நிலையில் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. மேலும் இருவரும் தற்போது திரையுலகில் பிஸியாக இருப்பதால் ஒரு சில மாதங்களில் திருமணம் செய்து கொள்வோம் என்று அவ்வப்போது அளித்த பேட்டியில் கூறி வந்தனர்.

இந்நிலையில் தற்போது லேட்டஸ்டாக அளித்த பேட்டியில் நவம்பர் மாதம் தாங்கள் திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனை அடுத்து ரசிகர்கள் அமீர் - பாவனி காதல் ஜோடிக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.