close
Choose your channels

'துணிவு' படத்தில் நடித்ததை விட அந்த 3 மணி நேரம் தான் முக்கியம்: அமீர்-பாவனி பதிலடி

Sunday, January 22, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

அஜித் நடித்த 'துணிவு’ திரைப்படத்தில் ஒரு சின்ன கேரக்டரில் அமீர் மற்றும் பாவனி நடித்த நிலையில் அவர்களது கேரக்டரை கேலி செய்த நெட்டிசன்களுக்கு இருவரும் பதிலடி கொடுத்துள்ளனர்.

அஜித் நடித்த 'துணிவு’ திரைப்படம் சமீபத்தில் பொங்கல் விருந்தாக வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ரூ.200 கோடியை தாண்டி வசூலை வாரி குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் 'துணிவு’ படத்தில் பிக் பாஸ் போட்டியாளர்களான அமீர் மற்றும் பாவனி ஆகிய இருவரும் ஒரு சின்ன கேரக்டரில் நடித்திருந்த நிலையில், சில நிமிடங்களே வரும் அவர்களது கேரக்டர் குறித்து நெட்டிசன்கள் கேலியும் கிண்டலும் செய்திருந்தனர்.

இந்த கிண்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமீர் மற்றும் பாவனி கூறியபோது, ‘அஜித்துடன் நடிக்கிறோம் என்று கூறியவுடன் என்ன கேரக்டர் என்பதை கூட நாங்கள் யோசிக்கவில்லை, அவருடன் நடித்தால் போதும் என்று மட்டுமே நாங்கள் யோசித்தோம். அதுமட்டுமின்றி இந்த படத்தில் நடித்ததை விட அவர் எங்களுடன் மூன்று மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார், அந்த மூன்று மணி நேரத்தில் அவர் கூறிய அறிவுரைகள் மிகப்பெரிய விஷயம், அதைத்தான் நாங்கள் மிகவும் முக்கியமாக கருதுகிறோம்’ என்றும் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment