அடுத்த லெவலுக்கு சென்ற அமீர் - பாவனி .. வைரல் புகைப்படங்கள்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் காதலர்களாக மாறிய அமீர் மற்றும் பாவனி தற்போது இருவரும் ஒரே திரைப்படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக வந்தவர் நடன இயக்குனர் அமீர் என்பதும், அவர் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்றது முதல் பாவனியை ஒருதலையாக காதலித்து வந்தார் என்பது தெரிந்ததே. ஒரு கட்டத்தில் பாவனியும் அமிரின் காதலை ஏற்றுக் கொண்டார் என்பதும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் தங்கள் காதலை தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது இருவரும் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளனர் என்பதும் அந்த திரைப்படத்தை அமீர் இயக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இருவரும் அஜித்தின் ‘துணிவு’ திரைப்படத்தில் நடித்துள்ளனர் என்பது தெரிந்ததே.
ஷபீர் இசையமைக்கும் இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்ற நிலையில் இந்த பூஜையில் அமீர் மற்றும் பாவனி, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout