விவாகரத்து வதந்திக்கு அன்பான வரிகளால் முற்றுப்புள்ளி வைத்த பிரபல நடிகை!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தனது சமூகவலைத்தள கணக்குகளில் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் என்றிருந்த பெயரை நேற்று திடீரென மாற்றினார். இதையடுத்து நடிகை பிரியங்கா தனது கணவர் நிக் ஜோனாஸை பிரியப்போகிறார் என்பது போன்ற தகவல்கள் சமூகவலைத் தளங்களில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து நாங்கள் விவாகரத்து வதந்திக்கு நடுவே குழந்தையை எதிர்ப்பார்க்கிறோம் என்று நடிகை பிரியங்கா சோப்ரா ஒரு காமெடி நிகழ்ச்சி மேடையில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் வசித்துவரும் நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தீபாவளி பண்டிகையை தனது கணவர் நிக்குடன் புது வீட்டில் கோலாகலமாக கொண்டாடினார். இதுகுறித்த புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது.
இந்நியில் நடிகை பிரியங்கா தனது சோஷியல் மீடியா கணக்குகளில் இருந்து ஜோனாஸ் என்பதை மட்டும் நீக்கியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நிக்கை அவர் விவாகரத்துச் செய்யப்போகிறார் என்பது போன்ற தகவல்கள் சோஷியல் மீடியாவில் வைரலானது. இதற்கு பிரியங்காவின் தாயார் மது சோப்ரா மறுப்பு தெரிவித்து தனது எதிர்கால சினிமா வாழ்க்கையை கருத்தில்கொண்டு இந்த மாற்றத்தை அவர் செய்துள்ளதாக கருத்துத் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் நடிகை பிரியங்காவும் ஜோனாஸ் பிரதர்ஸ்ஸும் ஒரு காமெடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்காவில் பிரபல இசை குழுவாகச் செயல்பட்டுவரும் ஜோனாஸ் பிரதர்ஸ் மூவரும் மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது நடிகை பிரியங்கா தனது கணவர் நிக்கை குறித்து கிண்டல் செய்து பேசுகிறார். இதுகுறித்த வீடியோ ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ்-இல் வெளியாகி இருக்கிறது.
அதில் எனது கணவர் நிக்கை Roast செய்வதற்காக வந்திருக்கிறேன். நான் கலாச்சாரம், இசை, பொழுதுபோக்கு என அனைத்தும் அம்சங்களும் அடங்கிய வளமான இந்தியாவில் இருந்து வந்திருக்கிறேன். இத்தனை வளம் இருப்பதால்தான் ஜோனாஸ் பிரதர்ஸ் இதுவரை இந்தியாவிற்கு வந்ததேயில்லை என கிண்டல் செய்தார்.
மேலும் நிக்குக்கும் எனக்கும் 10 வயது இடைவெளி உண்டு. அதனால் 90S பற்றிய இசை குறிப்புகள் எதுவும் நிக்கிற்கு தெரிவதேயில்லை. அதுகுறித்து நான்தான் சொல்லிக்கொடுக்கிறேன். அதேபோல டிக்டாக் போன்ற தற்போதைய விஷயங்களை அவர் எனக்கு சொல்லிக் கொடுக்கிறார்.
மேலும் தங்களுடைய வாழ்க்கையைப் பற்றி பேசிய அவர், ஜோனாஸ் பிரதர்ஸ்க்கு குழந்தைகள் இருக்கின்றன. கெவினுக்கு 2 மகள்கள், ஜோவிற்கு 1 மகள் இருக்கிறார். ஆனால் குழந்தைகள் இல்லாத ஒரே ஜோடி நாங்கள் மட்டுமே. விரைவில் எதிர்ப்பார்க்கிறோம்“ எனப் பகிர்ந்து கொண்டார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் விவாகரத்து செய்யப்போவதாக உலாவரும் வதந்திக்கும் இதன்மூலம் அவர் பதிலளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலிவுட் பிரபலமான நடிகை பிரியங்கா அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனாஸை கடந்த 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். தற்போது ஹாலிவுட்டில் பிரம்மாண்ட திரைப்படமான Matrix-4 இல் இணைந்து நடித்து வருகிறார். இதைத்தவிர Text for You, Citadel போன்ற வெப் சீரிஸில் நடித்துவரும் இவர் பாலிவுட்டில் ஆலியா பட், கேத்ரினா கைஃப்புடன் இணைந்து Jee lee zaraa எனும் திரைப்படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments