பிரிட்டனில் இருந்து சென்னை வந்தவருக்கு கொரோனா பாசிடிவ்??? புதிய வகை கொரோனாவா???
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரிட்டனில் கடந்த வாரம் முதல் புதிய வகை கொரோனா மாதிரி பரவி வருவதாகக் கூறப்பட்டது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் மற்ற வகைகளைவிட 70% அதிவேகமாக பரவுவதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்தது. இதனால் இங்கிலாந்தின் பல மாகாணங்களுக்கு தற்போது ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும் புதிய வகை கொரோனா பாதிப்பை தவிர்ப்பதற்காக இந்தியா உட்பட பல நாடுகள் பிரிட்டன் நாட்டின் விமான சேவையை ரத்து செய்து இருக்கின்றன.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரிட்டனில் இருந்து சென்னைக்கு விமானம் மூலம் வந்தவருக்கு கொரோனா உறுதிச் செய்யப்பட்டு உள்ளதாகச் சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டு உள்ளது. இந்தத் தகவலை அடுத்து பிரிட்டனில் இருந்து வந்தவருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் (VUI-202012/01) பாதிப்பாக இருக்குமோ எனப் பலரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் பாதிக்கப்பட்டவரின் சளி மாதிரி பூனே அறிவியல் ஆராய்ச்சி கழகத்தில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாகத் தகவல் கூறப்பட்டு இருக்கிறது.
அந்த ஆய்வு முடிவுகள் வெளியான பிறகுதான் புதிய வகை கொரோனா மாதிரியா என்பதை உறுதி செய்ய முடியும் என்று சுகாதாரத்துறை செய்தி வெளியிட்டு இருக்கிறது. இதனால் பொதுமக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout