வலியில் துடித்த கர்ப்பிணியை கொட்டுப் பனியில் 12 கி.மீ தூக்கிச் சென்ற இளைஞர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்!!!
- IndiaGlitz, [Thursday,January 07 2021]
டெல்லி உட்பட பல வடகிழக்கு மாநிலங்களில் தற்போது மைனஸ்க்கு கீழ் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் நிலைமையை நினைத்தப் பார்த்தால நமக்கே புரியும். கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு தற்போது காஷ்மீரில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் சாலைகளில் 1 அடி வரைக்கும் ஐஸ்கட்டிகள் நிரம்பி வழிவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த ஒரு கர்ப்பிணியை சில இளைஞர்கள் சேர்ந்து 12 கி.மீ வரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற சம்பவம் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர்களுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரின பார்முல்லா மாவட்டத்தின் ரஷ்யாபத் எனும் கிராமத்தில் வசித்து ஒரு இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. ஆனால் வெளியே கடும் பனிப்பொழிவு கொட்டி வருவதால் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்தக் குடும்பத்தினர் அரசாங்க அதிகாரிகளை துணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் எந்தவித உதவியும் கிடைக்காத பட்சத்தில் அந்த கிராமத்தின் இளைஞர்களே அந்தப் பெண்ணிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
கர்ப்பிணியை ஒரு பெரிய துணியில் சுற்றி வைத்துக்கொண்டு ரஷயாபாத் கிராமத்தில் இருந்து புறப்பட்ட இளைஞர்கள் சுமார் 12 கி.மீ வரை கொட்டும் பனியில் சுமந்தே சென்றுள்ளனர். சாலைகளிலும் ஐஸ்கட்டி நிரம்பி வழிந்தபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாத இளைஞர்கள் கர்ப்பிணியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பெண்ணிற்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கொட்டும் பனியை பொருட்படுத்தாது சரியான நேரத்தில் உதவிய இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.