வலியில் துடித்த கர்ப்பிணியை கொட்டுப் பனியில் 12 கி.மீ தூக்கிச் சென்ற இளைஞர்கள்… நெகிழ்ச்சி சம்பவம்!!!

  • IndiaGlitz, [Thursday,January 07 2021]

டெல்லி உட்பட பல வடகிழக்கு மாநிலங்களில் தற்போது மைனஸ்க்கு கீழ் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இந்நிலையில் காஷ்மீரின் நிலைமையை நினைத்தப் பார்த்தால நமக்கே புரியும். கடந்த வருடங்களில் இல்லாத அளவிற்கு தற்போது காஷ்மீரில் பனிப்பொழிவு இருந்து வருகிறது. இதனால் சாலைகளில் 1 அடி வரைக்கும் ஐஸ்கட்டிகள் நிரம்பி வழிவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் காஷ்மீர் மாநிலத்தில் பிரசவ வலியால் துடித்த ஒரு கர்ப்பிணியை சில இளைஞர்கள் சேர்ந்து 12 கி.மீ வரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்ற சம்பவம் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த இளைஞர்களுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். காஷ்மீரின பார்முல்லா மாவட்டத்தின் ரஷ்யாபத் எனும் கிராமத்தில் வசித்து ஒரு இளம்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. ஆனால் வெளியே கடும் பனிப்பொழிவு கொட்டி வருவதால் வாகனங்கள் எதுவும் செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அந்தக் குடும்பத்தினர் அரசாங்க அதிகாரிகளை துணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் எந்தவித உதவியும் கிடைக்காத பட்சத்தில் அந்த கிராமத்தின் இளைஞர்களே அந்தப் பெண்ணிற்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.

கர்ப்பிணியை ஒரு பெரிய துணியில் சுற்றி வைத்துக்கொண்டு ரஷயாபாத் கிராமத்தில் இருந்து புறப்பட்ட இளைஞர்கள் சுமார் 12 கி.மீ வரை கொட்டும் பனியில் சுமந்தே சென்றுள்ளனர். சாலைகளிலும் ஐஸ்கட்டி நிரம்பி வழிந்தபோதும் அதையெல்லாம் பொருட்படுத்தாத இளைஞர்கள் கர்ப்பிணியை சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதனால் அப்பெண்ணிற்கு சுகப்பிரசவத்தில் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில் கொட்டும் பனியை பொருட்படுத்தாது சரியான நேரத்தில் உதவிய இளைஞர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

More News

என்னடா இது அதிசயமா இருக்கு, எல்லாரும் ஆரியை திடீர்ன்னு புகழ்றாங்க!

பிக்பாஸ் வீட்டில் ஆரி கடந்த 90 நாட்களுக்கும் மேலாக சூப்பராக விளையாடி வரும் நிலையில் தற்போது ஆரியை மற்ற ஆறு போட்டியாளர்களும் குறி வைத்து உள்ளனர்

மற்றொரு விஷவாயுக்கசிவு சம்பவம்… 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு!!!

ஒடிசா மாநிலத்தின் ரூர்கேலா உருக்காலை நிறுவனத்தில் நேற்றுக் காலை பயங்கர விஷவாயு கசிவு ஏற்பட்டு உள்ளது.

100% இருக்கைகள் அனுமதியை எதிர்த்து வழக்கு: விசாரணை எப்போது?

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு திரையரங்குகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது என்பது தெரிந்ததே

பிரபல தமிழ் நடிகைக்கு இன்றிரவு ரகசிய திருமணமா?

பிரபுசாலமன் இயக்கிய 'கயல்' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஆனந்தி. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இவர் 'கயல் ஆனந்தி' என்றே அழைக்கப்பட்டு வருகிறார் 

பள்ளி திறந்து சில தினங்களில் எகிறிய கொரோனா பாதிப்பு… மீண்டும் விடுமுறை!!!

கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு கல்வி நிறுவனங்களின் நடைமுறை பெரும் அளவிற்கு மாறிவிட்டது.