UP யில் மற்றொரு கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்!!! நாடு முழுவதும் அதிர்ச்சி அலை…

  • IndiaGlitz, [Thursday,October 01 2020]

 

உத்திரப்பிரதேச மாநிலத்தில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலை ஏற்பட்டு உள்ளது. இத்தகைய குற்றங்களைக் களைவதற்காக அம்மாநில முதல்வர் சென்ற வாரம் கடுமையான விதிமுறைகளையும் கொண்டு வந்தார். இந்நிலையில் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெறுவது குறித்து பலரும் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.

உத்திரப்பிரதேசத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் வயல் வெளியில் வேலைப்பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம்பெண்ணை கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி 4 பேர் கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அம்மாநிலத்தில் கடும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. மேலும் இச்சம்பவத்தால் இளம்பெண் கடுமையாகத் தாக்கப்பட்டு இருந்ததால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சில தினங்களுக்குமுன் சிகிச்சை பலனின்றி அப்பெண் உயிரிழந்த சம்பவம் கடும் சோகத்தை ஏற்படுத்தியது.

 

இச்சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். ஆனால் இந்த விவகாரத்தில் மாநில அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும் பாதிக்கப்பட்டவர் பட்டியலினப் பெண் என்பதால் பாரபட்சம் காட்டப்பட்டது எனப்பல குற்றச்சாட்டுகள் முன்வைக்ககப்பட்டன. இச்சம்பவத்தின் தாக்கமே குறையாத நிலையில் தற்போது உத்திரப்பிரதேசத்தில் அடுத்த கூட்டுப்பாலியல் சம்பவம் நடைபெற்று இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

பல்ராம்பூர் மாவட்டத்தில் வேலைக்குச் சென்று திரும்பிவந்த 22 வயது இளம்பெண்ணை ஒரு கும்பல் கடத்தி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. மேலும் அவரை கடுமையாகத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அப்பெண் உயிரிழந்து இருக்கிறார். இதனால் அம்மாநிலத்தில் மேலும் கடும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது. இந்த வழக்குத் தொடர்பாக சிறுவன் உள்ளிட்ட 2 பேர் கைது செய்யப் பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில் இச்சம்பவத்திற்கு அம்மாநிலத்தின் எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

திரையரங்குகள் திறப்பு: மத்திய அரசின் அறிவிப்பு குறித்து கடம்பூர் ராஜூ கருத்து!

தமிழகத்தில் இன்று முதல் அடுத்தகட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில் இந்த ஊரடங்கில் அமல்படுத்தப்படும் தளர்வுகள் குறித்து தமிழக அரசு ஏற்கனவே அறிவித்து இருந்தது.

வெற்றிமாறன் - கௌதம் மேனன் இணையும் படத்தின் டைட்டில் அறிவிப்பு!

அமேசான் பிரைம் ஓடிடிக்காக தயாரான ஆந்தாலஜி திரைப்படம் ஒன்றின் டைட்டில் 'புத்தம் புது காலை' என்று வைக்கப்பட்டிருந்த செய்தி குறித்து நேற்று பார்த்தோம்.

நயன்தாராவுக்கு திமுகவின் உறுப்பினர் அட்டை: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்!

கடந்த சில நாட்களாக ஆன்லைன் மூலம் திமுக-வில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. ஒரே நாளில் 72 லட்சம் பேர் திமுகவில் உறுப்பினராக இணைந்து உள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது 

தனுஷ்-சிம்பு பட தயாரிப்பாளர் மாரடைப்பல் மரணம்!

விக்ரம், தனுஷ், சிம்பு உள்பட பிரபல நடிகர்களின் திரைப்படங்களை தயாரித்த தயாரிப்பாளர் எஸ்கே கிருஷ்ணகாந்த்  திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தது தமிழ் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

சம்பள விவகாரம்: விஜய் டிவியின் விளக்கத்திற்கு கஸ்தூரி பதில்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதற்கான சம்பளத்தை விஜய் டிவி நிர்வாகம் தனக்கு ஒரு வருடமாகியும் தரவில்லை என நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு இருந்தார்.