டெல்டாவை விட மோசமான வைரஸ் கண்டுபிடிப்பு… அலறும் விஞ்ஞானிகள்!
- IndiaGlitz, [Wednesday,July 07 2021]
இந்தியாவில் இரண்டாம் அலை கொரோனா பரவலுக்கு காரணமான டெல்டா வைரஸை பார்த்து தற்போது உலகமே நடுங்கிக் கொண்டு இருக்கிறது. காரணம் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட இந்தக் கொரோனா வைரஸ் இதுவரை 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக WHO தெரிவித்து இருக்கிறது.
இந்நிலையில் கொரோனா வைரஸின் மரபணுவில் மாற்றம் ஏற்பட்டு புது உருமாறிய வைரஸ் ஒன்று பெரூ நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த வைரஸ் ஒருவரின் உடலில் 82% பாதிப்பை ஏற்படுத்தி விடுவதாக அமெரிக்க விஞ்ஞானிகள் கவலை தெரிவித்து உள்ளனர். மேலும் லாம்ப்டா வேரியண்ட் எனப்படும் இந்த வைரஸ் இதுவரை 30 நாடுகளில் பரவிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
பெரூ நாட்டில் கடந்த ஜுன் மாதத்தில் கண்டறியப்பட்ட லாம்ப்டா வேரியண்ட் தற்போது பிரிட்டனில் பரவி இருக்கிறது. இதுவரை 6 பேருக்கு பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறும் பிரிட்டன் சுகாதாரத்துறை இந்த வைரஸ் வேகமாகப் பரவக்கூடியதாக இருக்கிறது என்றும் அச்சம் வெளியிட்டு உள்ளது.
ஏற்கனவே டெல்டா வகை வைரஸால் பிரிட்டன் கடும் தாக்கத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில் வேகமாகப் பரவும் தன்மை கொண்ட லாம்ப்டா வேரியண்ட் வகை வைரஸ் குறித்து அந்நாட்டு அதிகாரிகள் கடும் கவலை வெளியிட்டு உள்ளனர். மேலும் தடுப்பூசி வீரியத்தை இது குறைத்து விடும் என்றும் அவர்கள் கருத்து வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019 டிசம்பர் மாதத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் இதுவரை இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வியட்நாம், அமெரிக்கா என பல நாடுகளில் புது வேரியண்ட்களை உருவாக்கி இருக்கிறது. அதிலும் இந்தியாவில் தோன்றிய டெல்டாவும் (B.1.617.2), இங்கிலாந்தில் தோன்றிய ஆல்பாவும் (B.1.1.7) அதிகப் பாதிப்பை ஏற்படுத்தி நிலையில் புதிதாக பெரூ நாட்டில் உருமாறிய வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் கொரோனா வைரஸ்க்கு முற்றுப்புள்ளியே வைக்க முடியாதோ என விஞ்ஞானிகள் கவலை அடைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.