விண்வெளித் துறையில் புதிய சாதனை படைத்த அமெரிக்கா!!! Spacex நிறுவனத்தின் மதிப்பு கூடுகிறது!!!

  • IndiaGlitz, [Monday,June 01 2020]

 

அமெரிக்கா கடந்த 2011 க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ஆட்களை அனுப்பும் திட்டங்களை கைவிட்டு இருந்தது. விண்கலத்தின் தயாரிப்புக்கு பெரும்பாலும் உலக நாடுகள் ரஷ்யாவை நாட வேண்டிய தேவையே இதற்கு காரணமாகச் சொல்லப்பட்டது. தற்போது தனியார் நிறுவனமான Spacex நிறுவனம் தயாரித்த விண்கலத்தில் நாசா வீரர்கள் இரண்டு பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்குப் பத்திரமாக அனுப்பப் பட்டனர். கடந்த புதன்கிழமை Spacex நிறுவனம் தயாரித்த விண்கலம் பால்காம் – 9 ராக்கெட் மூலமாக விண்வெளிக்கு அனுப்பும் கவுண்டன் தொடங்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் மோசமான வானிலை காரணமாக இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது. அதையடுத்து இந்திய நேரப்படி சனிக்கிழமை இரவு இந்த விண்கலம் கவுண்டன் ஆரம்பிக்கப்பட்டு பத்திரமாக விண்ணை நோக்கி பறந்தது.

நாசா வீரர்களான டக் ஹர்லி மற்றும் பாப் பெஹன்கென் ஆகியோர் முதல்முறையாக காப்சூல் வடிவில் தயாரிக்கப் பட்ட விண்கலத்தில் பயணம் செய்தனர். கசிவு, அழுத்தம், வெப்பநிலை போன்ற பல்வேறு கட்ட சோதனைகளுக்குப் பிறகு இந்த விண்கலம் தனது வெற்றிப் பாதையைத் தொடங்கியது. தற்போது விண்கலம் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப் பட்டதாகவும் ஏற்கனவே அங்கிருந்த ரஷ்யா மற்றும் அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய விண்வெளி வீரர்களை வரவேற்றதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள லாஜ் ஏன்ஜெல்ஜின் கென்னடி விண்வெளி நிலையத்தில் இருந்து விண்கலம் தனது பயணத்தைத் தொடங்கியது எனவும் சரியாக 19 மணி நேரம் பயணம் செய்து சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டதாகவும் Spacex நிறுவனம் அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. விண்கலத்தின் வடிவமைப்புக்கும் தயாரிப்புக்கும் அதிகபடியான பணம் செலவாவதைத் தடுக்கும் வகையில் Spacex நிறுவனம் புதிய கேப்சூல் வடிவிலான விண்கலத்தை தயாரித்து இருக்கிறது. இந்தத் தயாரிப்பு ரஷ்யாவின் தயாரிப்பை விட மிகவும் விலை மலிவு என்பதையுத் தற்போது சர்வதேச ஊடகங்கள் விவாதித்து வருகின்றன. தனியார் நிறுவனம் விண்கல தயாரிப்பில் புதிய சாதனையை படைதிருப்பதைத் தொடர்ந்து அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குநர் எலான் மஸ்க்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

More News

அமெரிக்காவில் வலுக்கும் கறுப்பினத்தவர் போராட்டம்!!! பதுங்கு குழிக்கு அழைத்துச் செல்லப்பட்ட அதிபர் ட்ரம்ப்!!!

மே 25 ஆம் தேதி முதல் அமெரிக்காவில் கறுப்பினத்தவர் போராட்டம் வலுத்து வருகிறது.

ஹாலிவுட் சூப்பர் ஹிரோயின் படத்தில் தனுஷ் நாயகி?

ஹாலிவுட்டில் ஏராளமான சூப்பர் ஹீரோ திரைப்படங்கள் வெளிவந்துள்ளன என்பதும் அவை உலகம் முழுவதும் கோடிக்கணக்கில் வசூலை வாரி குவித்துள்ளது என்பதும் தெரிந்ததே.

பிரபல வீராங்கனையின் வாழ்க்கை வரலாறு திரைப்படம்

விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் வாழ்க்கை வரலாறு திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக உருவாக்கப்படுவதும், அவை நல்ல வரவேற்பை பெற்று வருவதும் தெரிந்ததே.

'மாஸ்டர்', 'பேட்ட' படங்களுடன் கனெக்சன் ஆகும் விக்ரமின் அடுத்த படம்

சீயான் விக்ரம் தற்போது 'கோப்ரா' என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பதும், இந்த படத்தை அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார் என்பதும், இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் உள்ளது

42 ஆண்டுகள் கழித்து ரீமேக் ஆகும் கமல்-ரஜினி படம்: முக்கிய வேடத்தில் ஸ்ருதிஹாசன்

சூப்பர் ஹிட் ஆன பழைய திரைப்படங்கள் கடந்த சில ஆண்டுகளாக ரீமேக் செய்யப்பட்டு வருவது தெரிந்ததே. குறிப்பாக ரஜினிகாந்த் நடித்த 'பில்லா' உள்பட பல திரைப்படங்கள் ரீமேக் செய்யப்பட்டு வருகின்றன.