டிக்டாக் நிறுவனத்திற்கு செப்டம்பர் 15 வரை கெடு விதித்த டிரம்ப்!
Send us your feedback to audioarticles@vaarta.com
வரும் செப்டம்பர் 15ம் தேதிக்குள் டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்யாவிட்டால் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
கடந்த சில வாரங்களுக்கு முன் சீனாவின் செயலியான டிக்டாக் உள்பட 59 செயலிகளுக்கு இந்திய அரசு தடை விதித்தது. இதனை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட ஒரு சில நாடுகளும் டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்தது
இந்த நிலையில் அமெரிக்காவின் மைக்ரோசாப்ட் நிறுவனம் டிக்டாக் செயலியை விலைக்கு வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் மைக்ரோசாப்ட் உள்ளிட்ட அமெரிக்க நிறுவனம் ஏதாவது ஒன்றுக்கு டிக்டாக் செயலியை செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் விற்பனை செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் அமெரிக்காவில் டிக்டாக் செயலி தடை செய்யப்படும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த எச்சரிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
இந்த நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவன சிஇஓ சத்யா நாதெள்ள அவர்கள் கூறியபோது டிக் டாக் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் வாங்க தயாராக உள்ளதாகவும் இது குறித்து டிக்டாக் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் இந்த பேச்சுவார்த்தை முடிந்து விடும் என்று தாங்கள் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்
அமெரிக்கா கனடா ஆஸ்திரேலியா நியூசிலாந்து ஆகிய நாடுகளில் டிக் டாக் சேவையை மைக்ரோசாப்ட் வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout