கொரோனா எதிரொலி: துப்பாக்கி வாங்க நீண்ட வரிசையில் நிற்கும் பொதுமக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதி காரணமாக மால்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டு வரும் நிலையில் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்க மக்கள் முன் வந்து கொண்டிருக்கின்றனர். குறிப்பாக அமெரிக்காவில் எந்த கடையிலும் டாய்லெட் பேப்பர் இல்லை என்றும் பொதுமக்கள் அவற்றை மொத்தமாக வாங்கி தங்கள் வீடுகளில் குவித்து வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது
இந்த நிலையில் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவது மட்டுமின்றி அவற்றைப் பாதுகாக்கவும் பெரும் சிரமமாக இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர். வீதிகளில் ஆள் நடமாட்டம் இல்லை என்பதால் அத்தியாவசிய பொருள்களை கொள்ளையடிக்கும் கும்பல் அதிகமாக நடமாடி வருவதாகவும் அவர்களிடம் இருந்து பாதுகாக்க பொதுமக்கள் துப்பாக்கிகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாகவும் தெரிகிறது
கடந்த சில நாட்களில் மட்டும் ஏராளமானோர் துப்பாக்கிகளையும் அதற்கான தோட்டாக்களையும் வாங்கி வருவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து யூஎஸ் டைம்ஸ் நாளிதழுக்கு பேட்டி அளித்துள்ள ஒருவர் ’தான் வாங்கி வைத்திருக்கும் அத்தியாவசியமான பொருட்களை பாதுகாக்கவும் தனது குடும்பத்தினரை பாதுகாக்கவும் 1500 டாலர் கொடுத்து துப்பாக்கி வாங்கி இருப்பதாக கூறியுள்ளார்
கொரோனா வைரஸ் காரணமாக பொதுமக்கள் வாங்க அதிக அளவில் துப்பாக்கி வாங்க முன்வந்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments