வீட்டு வாசலில் வைஃபை யூசர்நேம், பாஸ்வேர்டை எழுதி வைத்த கலை இயக்குனர்: ஆனால் ஒரு சிக்கல்!
- IndiaGlitz, [Sunday,August 30 2020]
அமெரிக்காவை சேர்ந்த பிரபல கலை இயக்குனர் தனது வீட்டு சுவற்றில் தன்னுடைய வைஃபை யூசர்நேம் மற்றும் பாஸ்வேர்ட்களை எழுதி ஒட்டி வைத்திருக்கிறார். இதில் யூசர் நேம் ’குட்லக்’ என்று உள்ளது. ஆனால் பாஸ்வேர்டு தான் பார்த்தவுடன் மலைக்க வைக்கும் அளவிற்கு மிக நீளமாக உள்ளது. அந்த பாஸ்வேர்டு மொத்தம் சுமார் 1000 எழுத்துக்கள் கொண்ட நீளமான ஒரு பாஸ்வேர்டாக உள்ளது.
அந்த பாஸ்வேர்டை ஞாபகம் வைத்துக்கொள்வது என்பது கனவிலும் நடக்காத ஒன்று. இதனை அடுத்து அந்த பகுதியில் உள்ளவர்கள் அந்த பாஸ்வேர்டை வீடியோ எடுத்து செல்லும் வீடியோக்களும் சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
இவ்வளவு நீளமான ஆங்கில எழுத்துக்களால் கொண்ட பாஸ்வேர்டை பக்கத்து வீட்டுக்காரர்கள் பயன்படுத்துவதை விட அவர்களே தனியாக ஒரு வைஃபை கனெக்ஷன் வாங்கிக் கொள்ளலாம் என்று கமெண்ட்டுகளை பதிவாகி வருகிறது.
பிரபல கலை இயக்குனர் ஒருவர் தனது வீட்டின் வாசலில் வைஃபை பாஸ்வேர்டை பதிவு செய்திருப்பதும் அது குறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
View this post on InstagramA post shared by Pablo Rochat (@pablo.rochat) on Aug 27, 2020 at 7:52am PDT