அமெரிக்காவை நெருங்கும் புயல்: கொரோனாவைவிட பன்மடங்கு சேதமாக வாய்ப்பா?
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகிலேயே கொரோனாவினால் மிக மோசமாக பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக இருப்பது அமெரிக்கா தான். இந்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 2000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர் என்றும் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது. இன்னும் அமெரிக்காவில் மிக மோசமான பாதிப்பு இருக்கும் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கொரோனாவை விட மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் புயல் ஒன்று அமெரிக்காவை வரும் ஜூன் மாதத்தில் தாக்க வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த புயல் கொரோனாவை விட அமெரிக்காவை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என நிபுணர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா, புயல் ஆகிய இரண்டையும் சந்திக்கும் அளவுக்கு தற்போது அமெரிக்க மக்களிடம் மனதைரியம் இல்லை என்றும் அதுமட்டுமின்றி இந்த புயலால் அமெரிக்காவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும் கொரோனா அச்சம் காரணமாக அமெரிக்க மக்கள் அனைவரும் வீட்டுக்குள் முடங்கி இருக்கும் நிலையில் வீடு இன்றி இருப்பவர்கள் மட்டும் தற்போது ஆங்காங்கே வசித்து வருகின்றனர். ஆனால் புயல் நேரத்தில் இவர்கள் அனைவரையும் பாதுகாக்க ஒரே இடத்தில் முகாம்களில் தங்க வைக்கப்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மொத்தமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டால் அவர்களில் ஒருவருக்கு கொரோனா இருந்தாலும் சிக்கல் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் பெரும் அச்சத்தில் அமெரிக்க அரசு இருப்பதாக கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments