ஐடி ஊழியர்களின் தலையில் விழுந்த இடி... அமெரிக்கா முன்னெடுக்கும் நடவடிக்கையால் பாதிப்பு!!!

  • IndiaGlitz, [Tuesday,June 23 2020]

 

அமெரிக்க தொழிலாளர் சந்தையில் வெளிநாட்டு தொழிலாளர்களின் ஆதிக்கம் நிறைந்து காணப்படுவதாகவும் கொரோனா நேரத்தில் இத்தகைய செயல்பாடுகள் சொந்த நாட்டிற்கு பாதகமாக அமையும் எனவும் கூறி அதிபர் ட்ரம்ப் தற்போது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் முதன் கட்டமாக தொழில்நுட்ப மின்பொறியாளர்களுக்கு வழங்கப்படும் H-1B விசா வழங்குவதை இந்த ஆண்டு இறுதி வரை ரத்து செய்திருக்கிறார் அதிபர் ட்ரம்ப். இந்த நடவடிக்கையால் பாதிக்கப்படுவது இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த தொழிலாளர்கள்தான் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இருந்தும் சீனாவில் இருந்தும் ஆண்டுதோறும் இன்ஜினியரிங் துறையில் பட்டம் பெற்ற பலர் அமெரிக்காவிற்கு படையெடுப்பது வழக்கம். தற்போது விசா வழங்குவதை அதிபர் அதிகாரப் பூர்வமாக ரத்து செய்து இருக்கிறார்.

வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு விசாக்களை ரத்து செய்தால் அந்த வேலைவாய்ப்பு உள்ளூர் வாசிகளுக்கு வழங்குவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். ஆனால் இந்த நடவடிக்கைக்கு அந்நாட்டின் எதிர்க்கட்சி முதற்கொண்டு, வணிக அமைப்புகள், மனித உரிமை ஆர்வலர்கள் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் நவம்பரில் அந்நாட்டு அதிபருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தனை எதிர்ப்புகளையும் மீறி அதிபர் ட்ரம்ப் H-1B விசாக்களை இந்த ஆண்டு இறுதிவரையிலும் நிறுத்தி வைத்து இருக்கிறார். மேலும், H-2B விசாக்களும் இதே விதிகள் பொருந்தும்.

இதனால் ஏற்கனவே அமெரிக்காவில் குடியுரிமை பெற்று பல ஆண்டுகளாகத் தங்கியிருக்கும் குடும்பத்தினர் பாதிக்கப்பட மாட்டார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது. முறையான பயண ஆவணங்கள் இல்லாமல், விசா இல்லாமல் தங்கியிருக்கும் நபர்களுக்கு தற்போது பெரிய சிக்கல் ஏற்பட இருக்கிறது என்பதும் சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிவரை H-1B விசாக்களை கண்டிப்பாக வழங்கப்படாது என்றும் அவசியமான தேவைகளுக்கு மட்டுமே தொழிலாளர்கள் வரவழைக்கப் படுவார்கள் எனவும் அந்நாட்டின் குடியுரிமை வழங்கல் அலுவலகம் தெரிவித்து இருக்கிறது.

இதைத்தவிர J விசாக்கள் மூலம் பயணம் செய்யும் பயிற்சியாளர்கள், கோடைகால பணித்திட்ட வல்லுநர்கள், ஆசிரியர்கள், கவுன்சிலர்களின் விசாக்களும் இந்த ஆண்டு இறுதிவரை நிறுத்தி வைக்கப்பட உள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிவரையிலும் அந்நாட்டின் குடியுரிமைக்கு விண்ணப்பிக்க முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. அந்நாட்டின் அடுத்த நிதியாண்டு 2021 அக்டோபர் 1 ஆம் தேதி வருகிறது. அந்த நிதியாண்டில் பணியாற்றுவதற்காக பல ஐடி தொழிலாளர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார்கள். அவர்களும் இந்த ஆண்ட இறுதி வரை அமெரிக்காவிற்கு செல்ல முடியாது என்று அறிக்கையில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டுவரை காத்திருந்து அந்த ஊழியர்கள் அமெரிக்காவிற்கு பறக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

கொரோனா ஏற்படுத்தியிருக்கும் தாக்கத்தால் தற்போது அமெரிக்காவில் வேலையிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலைமையை சரிசெய்ய இதுபோன்ற நடவடிக்கைகள் அவசியம் என அதிபர் ட்ரம்ப் வலியுறுத்தி வருகிறார். கடந்த மே மாதத்தில் H-1B விசாக்களுக்கு தடை விதிப்பின் மூலம் தற்காலிகமாக மற்ற நாட்டு பொறியாளர்களுக்கு வேலை இல்லாமல் செய்து சொந்த நாட்டு மக்களுக்கு அந்த வேலை வாய்ப்பை உறுதி செய்யலாம் என அமெரிக்கா கருதுவதாக வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே சர்வதேச நாயண நிதியம் மற்றும் உலக வங்கி போன்றவை அமெரிக்காவின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்திக்கும் என எச்சரித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுவதாகவும் Wall Street பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருக்கிறது. அதைத்தொடர்ந்து தற்போது ட்ரம்ப் அதிகாரப்பூர்வமாக H-1B விசாக்களை ரத்து செய்து உத்தரவிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராகும் தமிழர்!!!

தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட டாக்டர் சேதுராமன் பஞ்சநாதன் என்பவர் அமெரிக்காவின் தேசிய அறிவியல் கழகத்தின் இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப் பட்டு இருக்கிறார்.

இணையத்தில் வைரலாகும் சமந்தாவின் யோகா புகைப்படம்

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 21ஆம் தேதி உலக யோகா தினம் கொண்டாடப்பட்டு வருவது தெரிந்ததே. கடந்த சில ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வரும் இந்த யோகா தினம்

சென்னை, கோவை, செஞ்சி: மூன்று ஊர்களில் மூன்று திருமணம் செய்த பலே வாலிபர்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த வாலிபர் ஒருவர் சொந்த ஊரில் ஒரு திருமணமும், பின்னர் வேலை நிமித்தம் கோவை மற்றும் சென்னை சென்றபோது அங்கு இரண்டு திருமணமும் செய்துகொண்ட தகவல் பெரும்

நயனுக்கு முத்தம் கொடுக்கும் விக்கி: வைரலாகும் புகைப்படம்

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் ஆகிய இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலர்களாக கோலிவுட் திரையுலகில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரிந்ததே

தனுஷின் 'ஜகமே தந்திரம்' படத்துடன் கனெக்சன் ஆகும் 'விக்ரம் 60'

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சியான் விக்ரம் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார்