கொரோனா பலியில் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கும் அமெரிக்கா!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் 2,600 பேர் கொரோனா நோய்த்தொற்றில் உயிரிழந்திருப்பதாக அமெரிக்காவின் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல் தெரிவித்து இருப்பது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கொரோனா நோய்த்தொற்று பரவ ஆரம்பித்ததில் இருந்தே எந்த நாட்டிலும் இவ்வளவு பலி எண்ணிக்கை இருந்ததில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. நேற்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொரோனா தாக்கத்தின் உச்சத்தில் இருந்து அமெரிக்கா சற்று பின்வாங்கியிருக்கிறது. மேலும் பொருளாதாரம், தொழில்வளர்ச்சியை தொடங்கும் நிலையில் சில மாகாணங்கள் இருப்பதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பலி எண்ணிக்கையில் அமெரிக்கா எந்த நாடுகளிலும் இல்லாத அளவிற்கு அதிகரித்து இருக்கிறது. இதுவரை அமெரிக்காவில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கொரோனா நிவாரண நிதியாக 2 ட்ரில்லியன் டாலர்கள் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிவாரண நிதியின் ஒரு பகுதியாக மக்களுக்கு தற்போது காசோலைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த காசோலைகளில் அதிபர் ட்ரம்ப் பெயர் பொறிக்கப்பட்டு வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால் நிவாரண நிதி மக்களை சென்றடைவதில் காலதாமதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் இந்தக் குற்றச்சாட்டை கருவூல அதிகாரிகள் மறுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கொரோனா பாதிப்பினால் அமெரிக்காவில் கடந்த மாதம் மட்டும் 1.6 கோடி பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். எனவே வேலையில்லாதவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை கோருவோரின் எண்ணிக்கையும் அந்நாட்டில் அதிகரித்து வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments