வெற்றியோடு திரும்பி வருவேன்: ஜாபர் சாதிக் வழக்கின் சம்மன் குறித்து இயக்குனர் அமீர்..!

  • IndiaGlitz, [Monday,April 01 2024]

இயக்குனர் அமீருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பி இருந்த நிலையில் அந்த சம்மன் குறித்து அமீர் கூறிய ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சமீபத்தில் ஜாபர் சாதிக் என்பவரை கைது செய்து அவரை விசாரணை செய்த போது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்ததாக கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜாபர் சாதிக் தயாரிப்பில் உருவாகும் படத்தை இயக்குனர் அமீர் இயக்கி வந்ததை அடுத்து அவரிடமும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை செய்யலாம் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ஜாபர் சாதிக் விவகாரத்தில் இயக்குனர் அமீர் ஏப்ரல் 2ஆம் தேதி டெல்லியில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் வந்ததாக செய்தி வெளியானது. இந்த சம்மனை அடுத்து இயக்குனர் அமீர் நாளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன் ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அமீர் வெளியிட்டுள்ள ஆடியோவில், ‘போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் விசாரணையை எதிர்கொள்ள எப்போதுமே நான் தயாராக உள்ளேன், என் தரப்பில் இருக்கும் உண்மையையும் நியாயத்தையும் கூறி வெற்றியோடு திரும்பி வருவேன்’ என்று தெரிவித்துள்ளார்.