லிவிங் டுகெதரில் தான் இருக்கிறோம்.. ஆனால்.. பாவனி குறித்து அமீர் விளக்கம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
நானும் பாவனியும் லிவிங் டுகெதரில் தான் இருக்கிறோம் ஆனால் நாங்கள் எங்கள் குடும்பத்துடன் இருக்கிறோம் என்று பிக்பாஸ் போட்டியாளரும் நடன இயக்குனருமான அமீர் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அமீர் மற்றும் பாவனி ரெட்டி இருவரும் கலந்து கொண்ட நிலையில் இருவருக்கும் காதல் பற்றிக் கொண்டது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது அமீரின் காதலை பாவனி ரெட்டி ஏற்கவில்லை என்றாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் இருவரும் காதலிப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அமீர் - பாவனி திருமணம் செய்து கொண்டதாகவும் லிவிங் டுகெதர் மூலம் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் பல செய்திகள் இணையத்தில் வைரல் ஆகின.
இந்த நிலையில் சமீபத்தில் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அமீர் அதற்கு விளக்கம் அளித்துள்ளார். என்னைப் பற்றியும் பாவனி பற்றியும் பல செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. நாங்கள் இருவரும் லிவிங் டு கெதரில் வாழ்வதாகவும் திருமணம் செய்து கொண்டதாகவும் பாவனி கர்ப்பமாக இருப்பதாகவும் பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன
நாங்கள் லிவிங் டுகெதரில் இருப்பது ஒன்றுதான் உண்மைதான், ஆனால் அதே நேரத்தில் நாங்கள் இருவரும் எங்கள் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறோம். நாங்கள் தொழிலில் சாதித்த பின்னர் தான் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற முடிவில் இருக்கிறோம்.
நான் தற்போது ஒரு படத்தை இயக்கி வருகிறேன், சில படங்களில் நடன இயக்குனராகவும் பணிபுரிந்து வருகிறேன். அதேபோல் பாவனி வெப் சீரியல்களில் நடித்து வருகிறார், நாங்கள் இருவரும் ஒரு நல்ல நிலையை அடைந்த பிறகு திருமணம் செய்து கொள்வோம். நாங்கள் இருவரும் தொடர்ந்து காதலித்துக் கொண்டே இருப்போம், பிரிய மாட்டோம் என்றும் தெரிவித்தார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com