நான் இயக்கிய படம் பாதியில் நின்றதற்கு இதுதான் காரணம்: அமீர் அதிர்ச்சி தகவல்
- IndiaGlitz, [Monday,January 20 2020]
ஜல்லிக்கட்டு பிரச்சனையை மையமாக வைத்து இயக்குனர் அமீர் இயக்கிய ஒரு திரைப்படம் திடீரென பாதியில் நின்று போனது ஏன்? என்ற காரணத்தை இரண்டு வருடம் கழித்து தற்போது இயக்குனர் அமீர் மனம் திறந்து ஒரு திரைப்பட விழாவில் பேசியுள்ளார்
மாயநதி என்ற திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்திற்கு இளையராஜாவின் மகள் பவதாரணி இசையமைத்துள்ளார். இந்த இசை வெளியிட்டு விழாவில் யுவன்சங்கர்ராஜா உள்பட பலர் கலந்து கொண்ட நிலையில் இயக்குனர் அமீர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த விழாவில் அமீர் பேசியதாவது:
ஜல்லிக்கட்டை மையமாக வைத்து ’சந்தனத்தேவன்’ என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். ஆர்யா கதாநாயகனாக நடித்த இந்த படம் 35 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த படத்தை நானே தயாரித்து இயக்கினேன். ஆனால் இந்த படத்திற்கு பணம் கொடுக்கும் பைனான்சியர்கள் ’என்னை பொது மேடையில் அரசியல் பேசக்கூடாது என்றும் குறிப்பாக மத்திய மாநில அரசு குறித்து விமர்சனம் செய்யக்கூடாது என்றும் இந்த நிபந்தனைக்கு உட்பட்டால் மட்டுமே ஃபைனான்ஸ் செய்வதாகவும் கூறினார்கள். ஆனால் இந்த நிபந்தனையை நான் ஏற்றுக் கொள்ளவில்லை. அதனால் படத்தை நிறுத்தி விட்டேன் என்று கூறினார்
அமீர் இயக்கிய ‘சந்தனத்தேவன்’ திரைப்படம் ஏன் என்று போனது என இத்தனை ஆண்டுகளாக காரணம் தெரியாமல் இருந்த நிலையில் இயக்குனர் அமீர் இதன் காரணத்தை இப்போது வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது