என் மீது குற்றஞ்சாட்டுவதால் நீங்கள் 2 பயன்களை மட்டும் பெற முடியும்: அமீர் வெளியிட்ட வீடியோ
Send us your feedback to audioarticles@vaarta.com
போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் இயக்குனர் அமீரை தொடர்புபடுத்தி ஏராளமான செய்திகள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இது குறித்து இயக்குனர் அமீர் தன்னிலை விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது:
நான் இயக்கி வரும் ‘இறைவன் மிகப்பெரியவன்’ படத்தின் தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் குறித்த என்னுடைய நிலைப்பாட்டை நான் தெளிவாக விளக்கிய பிறகும், ஒரு சிலர் தொடர்ச்சியாக சமூக வலைதளப் பக்கங்களில் குற்றச்செயல்களோடு என்னை தொடர்புப்படுத்தி வீடியோ வெளியிட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
அடிப்படையாக மது, விபச்சாரம், வட்டி இது போன்ற விஷயங்களுக்கு எதிரான சித்தாந்தங்களை கொண்ட மார்க்கத்தை நான் பின்பற்றி வருகிறேன். இது போன்ற ஒரு குற்றச்செயலில் என்னை நீங்கள் தொடர்புப்படுத்தி பேசுவதால் எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முடியும், எனது குடும்பத்தினருக்கு மனஉளைச்சலை ஏற்படுத்த முடியும். இந்த இரண்டை தவிர, வேறு எந்த பயனையும் நீங்கள் அடைந்துவிட முடியாது.
நீங்கள் சொல்கின்ற அனைத்து குற்றச்சாட்டுகளையும் விசாரணை செய்ய காவல்துறை அதிகாரிகள் இருக்கிறார்கள். வேறு சில துறைகளை சேர்ந்த அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்கள் எப்போது என்னை அழைத்தாலும் நான் விசாரணைக்கு செல்ல தயாராக இருக்கிறேன். இந்த சோதனை கால கட்டத்தில் என் மீது அன்பு கொண்டு, நம்பிக்கை கொண்டு எனக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் என் நன்றிகள்’ என தெரிவித்துள்ளார்.
Director #Ameer Statement on #IraivanMigaPeriyvan Movie Issue!#Ameer #Iraivanmigaperiyvan #drug #AmeerSultan #ParuthiVeeran #Paruthiveeran pic.twitter.com/GzRxnF7Qgg
— ஆதிரா (@Priya_aathira) March 1, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments