விவசாயி கேரக்டரில் நடிக்கும் பிரபல இயக்குனர்

  • IndiaGlitz, [Wednesday,February 22 2017]

பிரபல இயக்குனர் அமீர், தனது அடுத்தபடமான 'சந்தனத்தேவன்' படத்தின் ஆரம்பகட்ட பணியில் பிசியாக உள்ளார். இந்நிலையில் தனது உதவியாளர் கோபால் இயக்குனராக அறிமுகமாக உள்ள 'அச்சமில்லை அச்சமில்லை' என்ற படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

இந்த படத்தின் கதை திருப்பூர் மற்றும் கோவை பகுதியில் உள்ள ஒரு முக்கிய பிரச்சனையை மையமாக கொண்டது என்றும் இந்த படத்தில் வெறும் பத்து நிமிடங்கள் மட்டுமே வரும் விவசாயி கேரக்டரில் அமீர் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. மேலும் இந்த படத்தை இயக்குனர் கோபால் அவர்களே தயாரித்து வந்தார். தற்போது 75% இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் தயாரிப்பு பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டதாக அமீர் கூறியுள்ளார்.

மேலும் இந்த படத்தின் டைட்டிலுக்காக இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் மகள் புஷ்பா கந்தசாமியுடன் பேசி அனுமதி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்த்தார். இதே பெயரில் கே.பாலசந்தர் இயக்கிய படம் ஒன்று கடந்த 1984ஆம் ஆண்டு அரசியல் படம் ஒன்று வெளிவந்து வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஆர்யா, அவருடைய சகோதரர் சத்யா உள்பட பலர் நடிக்கும் 'சந்தனத்தேவன்' திரைப்படத்திற்காக மூன்று நாயகிகளை தேடி வருவதாகவும், விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் இந்த படம் வரும் 2018ஆம் ஆண்டு பொங்கலில் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் இயக்குனர் அமீர் மேலும் கூறியுள்ளார்.

More News

தனுஷூடன் 4வது முறையாக இணையும் பிரபல இயக்குனர்

கோலிவுட் திரையுலகில் தற்போது நடிப்பு மட்டுமின்றி தயாரிப்பு, இயக்கம் என பிசியான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தனுஷ் தற்போது 'பவர்பாண்டி' என்ற படத்தை இயக்கி வருவதோடு, கவுதம் மேனனின் 'எனை நோக்கி பாயும் தோட்டா' மற்றும் வெற்றிமாறனின் 'வடசென்னை' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் விரைவில் ஹாலிவுட் படத்திலும் நடிக்கவுள்ளார்...

மாநகரம் படக்குழுவினர்களுக்கு பிரபல எடிட்டர் பாராட்டு

இன்றைய இளையதலைமுறை அறிமுக இயக்குனர்கள் திரைத்துறையில் எண்ட்ரி ஆகும்போது தங்களுடைய முழு திறமையையும் வெளிப்படுத்துவதால் கோலிவுட் ஆரோக்கியமான பாதையில் சென்று கொண்டிருக்கின்றது...

ஜல்லிக்கட்டில் மிருக வதைக்கான ஆதாரம். அடங்க மறுக்கும் பீட்டா

சென்னை மெரீனாவில் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எழுச்சி போராட்டம் காரணமாக ஜல்லிக்கட்டுக்கு பீட்டா அமைப்பினர் சுப்ரீம் கோர்ட்டில் தடை பெற்ற போதிலும் மத்திய மாநில அரசுகள் பிரத்யேக சட்டம் இயற்றியதால் இந்த ஆண்டு தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு மிகச்சிறப்பாக நடைபெற்றது.

சென்னை சிறைக்கு சிக்கலின்றி மாறுவாரா சசிகலா?

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்று தற்போது பெங்களூர் பரப்பன அக்ராஹர சிறையில் இருக்கும் சசிகலாவை சென்னை புழல் சிறைக்கு மாற்ற முயற்சிகள் நடந்து கொண்டிருப்பதாகவும், இதுகுறித்த நடவடிக்கைகளில் அதிமுக வழக்கறிஞர்கள் ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இதுகுறித்து அதிமுகவின் செய்தித்தொடர

டீசர், டிரைலருக்கு முன் இன்னொரு ஃபர்ஸ்ட்லுக். 'விவேகம்' இயக்குனர் சிவா

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது