ஓட்டு போட்றவன் எல்லாம் அரசியலுக்கு வர நினைச்சா, அப்புறம் எதுக்கு கட்சி? அமீரின் 'உயிர் தமிழுக்கு' டிரைலர்..!

  • IndiaGlitz, [Tuesday,April 16 2024]

அமீர் நடித்த ’உயிர் தமிழுக்கு’ என்ற படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே இது ஒரு அரசியல் படம் என்பது தெரிய வருகிறது.

இந்த ட்ரெய்லரில், ‘ஒவ்வொரு தேர்தல் வரும் போது இந்த மக்கள் எல்லாம், தனக்காக ஒரு தலைவர் வந்துவிட மாட்டாரா, தனக்கு என்று ஏதாவது செய்து விட மாட்டார்களா என்று அவர்களது நெஞ்சத்தில் ஒரு ஏக்கமும் எதிர்பார்ப்பும் இருக்கின்றது. எனவே வரும் எலெக்ஷனில் நானே நின்று அந்த கடுமையான பணியை செய்து விடலாம் என்று நினைக்கிறேன் என்று அமீர் பேசும் வசனத்துடன் இந்த ட்ரைலர் ஆரம்பம் ஆகிறது.

இதனை அடுத்து ’ஓட்டு போட்றவன் எல்லாம் அரசியலுக்கு வரணும்னு நினைச்சா, அப்புறம் எதுக்கு கட்சி, தலைமை, செயற்குழு ,பொதுக்குழு என்ற ராஜ்கபூர் பேசும் வசனமும் அடுத்தடுத்து வரும் நிலையில் இந்த படம் ஒரு சீரியசான அரசியல் படம் என்று தெரிய வருகிறது.

‘நான் மட்டும் முதலமைச்சர் ஆனால், தலைவர் எம்ஜிஆர் பாணியில் உள்ளாட்சி தேர்தலையே நடத்த விடாமல் செய்து விடுவேன் என்ற வசனமும், துப்பாக்கி தோட்டா கொண்டு என் தலையை துளைத்தாலும், பீரங்கியால் என்னை சுட்டு போட்டாலும் பிரியமுள்ள என் தமிழை உயிரிலிருந்தும் உடலில் இருந்தும் பிரிக்க முடியாது, பிரிக்க நினைப்பவர்கள் உயிர் பிழைக்க முடியாது என்ற அமீரின் மேடைப்பேச்சு வசனமும் மாசாக உள்ளது.

நான் என்ன உன்னை மாதிரி டேபிளுக்கு கீழே காலில் விழுந்து பதவிக்கு வந்தவன் என்று நினைத்தாயா? மக்களோடு மக்களாக இருந்து ஜெயிச்சு வந்தவன் என்று பேசும் வசனமும் தற்கால அரசியலை ஞாபகப்படுத்துவதாக உள்ளது. மொத்தத்தில் தேர்தல் நேரத்தில் வரும் ஒரு சரியான படமாக ’உயிர் தமிழுக்காக’ படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமீர், சாந்தினி, ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, சரவணா சக்தி, மகாநதி சங்கர் ,சுப்பிரமணிய சிவா, ராஜ்கபூர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ஆதம்பாவா என்பவர் இயக்கி உள்ளார். வித்யாசாகர் இசையில் உருவாகிய இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

திடீரென பிரேமலதாவை சந்திக்க இருக்கும் தளபதி விஜய்.. என்ன காரணம்?

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவை தளபதி விஜய் விரைவில் சந்திக்க இருப்பதாகவும் இந்த சந்திப்பு இன்னும் சில நாட்களில் நடக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

'தக்லைஃப்' படத்தில் நடந்த தலைகீழ் மாற்றம்.. மறுபடியும் முதல்ல இருந்தா?

உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் பிரபல இயக்குனர் மணிரத்னம் இணைந்த 'தக்லைஃப்' படத்தில் திடீரென ஒரு தலைகீழ் மாற்றம் நிகழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீக்கிரமே உலக அழகி பட்டத்தை வெல்வேன்-கருப்பு தமிழச்சி சான் ரேச்சல்

ரேச்சல் போன்ற பெண் பல தடைகளை உடைத்து எரிந்து வரும்போது இது போல பல பெண்கள் தனது வாழ்க்கை இலக்கை நோக்கி ஒரு படி முன் செல்ல நல்லதொரு உந்துதலாக இருக்கும்...

சம்மருக்கு இதுதான் சரியான டிரஸ்.. பீச் பேபியாக மாறிய மாளவிகா மோகனன்..!

நடிகை மாளவிகா மோகனன் அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் சற்றுமுன் அவர் கடலோர பகுதியில்

முதிர்ந்த வயதில் IVF மூலம் குழந்தை பெற்று கொள்வது ஆபத்தானதா ?

இந்த தொழில்நுட்ப காலத்தில் சாத்தியம் இல்லாத ஒன்றே இல்லை என்பதை உணர்ந்து தோல்வி கண்ட அனைவரும் மீண்டும் IVF முறையை மேற்கொள்ளலாம்...