ஓட்டு போட்றவன் எல்லாம் அரசியலுக்கு வர நினைச்சா, அப்புறம் எதுக்கு கட்சி? அமீரின் 'உயிர் தமிழுக்கு' டிரைலர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
அமீர் நடித்த ’உயிர் தமிழுக்கு’ என்ற படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த ட்ரெய்லரை பார்க்கும்போதே இது ஒரு அரசியல் படம் என்பது தெரிய வருகிறது.
இந்த ட்ரெய்லரில், ‘ஒவ்வொரு தேர்தல் வரும் போது இந்த மக்கள் எல்லாம், தனக்காக ஒரு தலைவர் வந்துவிட மாட்டாரா, தனக்கு என்று ஏதாவது செய்து விட மாட்டார்களா என்று அவர்களது நெஞ்சத்தில் ஒரு ஏக்கமும் எதிர்பார்ப்பும் இருக்கின்றது. எனவே வரும் எலெக்ஷனில் நானே நின்று அந்த கடுமையான பணியை செய்து விடலாம் என்று நினைக்கிறேன் என்று அமீர் பேசும் வசனத்துடன் இந்த ட்ரைலர் ஆரம்பம் ஆகிறது.
இதனை அடுத்து ’ஓட்டு போட்றவன் எல்லாம் அரசியலுக்கு வரணும்னு நினைச்சா, அப்புறம் எதுக்கு கட்சி, தலைமை, செயற்குழு ,பொதுக்குழு என்ற ராஜ்கபூர் பேசும் வசனமும் அடுத்தடுத்து வரும் நிலையில் இந்த படம் ஒரு சீரியசான அரசியல் படம் என்று தெரிய வருகிறது.
‘நான் மட்டும் முதலமைச்சர் ஆனால், தலைவர் எம்ஜிஆர் பாணியில் உள்ளாட்சி தேர்தலையே நடத்த விடாமல் செய்து விடுவேன் என்ற வசனமும், துப்பாக்கி தோட்டா கொண்டு என் தலையை துளைத்தாலும், பீரங்கியால் என்னை சுட்டு போட்டாலும் பிரியமுள்ள என் தமிழை உயிரிலிருந்தும் உடலில் இருந்தும் பிரிக்க முடியாது, பிரிக்க நினைப்பவர்கள் உயிர் பிழைக்க முடியாது என்ற அமீரின் மேடைப்பேச்சு வசனமும் மாசாக உள்ளது.
நான் என்ன உன்னை மாதிரி டேபிளுக்கு கீழே காலில் விழுந்து பதவிக்கு வந்தவன் என்று நினைத்தாயா? மக்களோடு மக்களாக இருந்து ஜெயிச்சு வந்தவன் என்று பேசும் வசனமும் தற்கால அரசியலை ஞாபகப்படுத்துவதாக உள்ளது. மொத்தத்தில் தேர்தல் நேரத்தில் வரும் ஒரு சரியான படமாக ’உயிர் தமிழுக்காக’ படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமீர், சாந்தினி, ஆனந்தராஜ், இமான் அண்ணாச்சி, சரவணா சக்தி, மகாநதி சங்கர் ,சுப்பிரமணிய சிவா, ராஜ்கபூர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படத்தை ஆதம்பாவா என்பவர் இயக்கி உள்ளார். வித்யாசாகர் இசையில் உருவாகிய இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com