சினிமாத்துறை இழுத்து மூட வேண்டிய நிலை வரும்: அமீர் எச்சரிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
கந்துவட்டி கொடுமையால் இயக்குனர் சசிகுமாரின் உறவினர் அசோக்குமாரின் மறைவு, அனைத்து திரையுலகினர்களையும் பொங்கியெழ செய்துள்ளது. விஷால், கவுதம்மேனன், சுசீந்திரன் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் கந்துவட்டிக்கு எதிராக குரல் கொடுத்துள்ள நிலையில் இதுகுறித்து இயக்குனர் அமீர் கூறியதாவது:
மதுரை அன்புச்செழியன் டார்ச்சர் செய்ததால் கடிதம் எழுதி வைத்துவிட்டு அசோக்குமார் தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து நாங்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் 306வது பிரிவின்படி அன்புச்செழியன் மீது வழக்குப்பதிவு செய்து எங்களுக்கு காப்பி கொடுத்துள்ளனர். வரும் 30ஆம் தேதி கம்பெனி புரடொக்சன் தயாரிப்பில் வெளியாக வேண்டிய படத்தை 'ரெட்' போட்டு நிறுத்தியதால் மனம் உடைந்த அசோக் குமார் இந்த முடிவை எடுத்துள்ளார். இவ்வளவிற்கும் அசோக்குமார் வட்டியை ஒழுங்காக கொடுத்து கொண்டிருக்கின்றார். இருப்பினும் பைனான்சியர் வட்டிக்கு மேல் வட்டியாக கந்துவட்டி கேட்டு மிரட்டியுள்ளார்
இந்த வழக்கு நியாயமாக பார்த்தால் 302 பிரிவில் தான் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இதுவொரு அப்பட்டமான கொலைதான். இருப்பினும் 306 பிரிவிலாவது வழக்குப்பதிவு செய்ததற்கு காவல்துறையினர்களுக்கு நன்றி. இருப்பினும் இந்த கொடுமையை உடனடியாக சரிசெய்ய வேண்டும். தொடர்ச்சியாக கந்துவட்டி கொடுமை தொடரந்தால் சினிமாத்துறையை இழுத்து மூட வேண்டிய நிலைதான் ஏற்படும்' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout