இந்த வேலையே வேணாம்: கதறிய பெற்றோர்களை சமாதானப்படுத்திய ஆம்புலன்ஸ் ஓட்டுனர்

  • IndiaGlitz, [Sunday,March 29 2020]

சென்னை மாநகரில் கொரோனா நோயாளிகளை ஏற்றிச் செல்வதற்காக பல்வேறு வசதிகளுடன் கூடிய ஆம்புலன்சை ஓட்டும் பணியில் உள்ள ஓட்டுனராக இருப்பவர் பாண்டித்துரை. ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த இவர் இந்த பணியை மிகவும் விருப்பத்துடன் செய்து வருகிறார்

இந்த நிலையில் கொரோனா நோயாளிகளை தொட்டு தூக்குவதால் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு விடுமோ என அஞ்சிய அவரது பெற்றோர்கள் உடனடியாக அந்த வேலையை விட்டுவிட்டு வீட்டுக்கு வர வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். தான் பிச்சை எடுத்தாவது உன்னைக் காப்பாற்றுகிறேன் என்றும், உடனடியாக வேலை விட்டு வந்து விடு என்றும் அவரது தாயும் தந்தையும் மாறி மாறி கூறியும், தன்னைப்போன்ற ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அனைவரும் இதுமாதிரி வேலையை விட்டு வந்து விட்டால், கொரோனா நோயாளிகளைப் யார் காப்பாற்றுவது? என்றும் அவர் தனது பெற்றோர்களை சமாதானப்படுத்தி இந்த வேலையில் தான் தொடரப் போவதாகவும் தனக்கு தகுந்த பாதுகாப்பை அரசு அளித்து இருப்பதாகவும் அதனால் தனக்கு எதுவும் ஆகாது என்றும் அவர் சமாதானப்படுத்துகிறார். ஊருக்கு உழைக்க பலர் இருக்கிறார்கள், ஆனால் எனக்கு நீ ஒரே ஒரு மகன் எனவே உடனடியாக வந்துவிடு என்று பெற்றோர்கள் கூறியும் அதனை மறுத்து தனது பணியை தொடர்ந்து கொண்டிருக்கும் பாண்டித்துரைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்த ஆடியோ தற்போது இணையதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. பாண்டித்துரையின் கடமை உணர்வை திரையுலக பிரபலங்கள் உள்பட பலரும் பாராட்டி வருகின்றனர். தனது கடமை உணர்வால் ஒரே நாளில் தமிழகம் முழுவதும் பாண்டித்துரை ஹீரோவாகிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : Polimer

More News

நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா காலமானார்

தமிழ் திரைப்பட நடிகையும் கிராம பாடல்களை பாடும் பாடகியுமான பரவை முனியம்மா இன்று அதிகாலை முதுமை மற்றும் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 83 

எனக்குள் இருந்த பிக்காஸோ வெளியே வந்துள்ளார்: பிரபல நடிகையின் வீடியோ வைரல்

கொரோனா வைரஸ் காரணமாக 21 நாட்கள் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்தது இந்திய மக்கள் கோடிக்கணக்கான பேர் வரலாற்றிலேயே முதல்முறையாக வீட்டுக்குள் முடங்கி கிடக்கின்றனர்

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று மேலும் ரூ.1000 கோடி நிதியுதவி செய்த டாடா

கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இந்திய மக்களை காப்பாற்ற மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைக்கு உதவிடும் வகையில் டாடா நிறுவனம் மிகப்பெரிய தொகையாக ரூ.500 கோடி நிதியுதவி

தமிழகத்தில் மேலும் இருவருக்கு கொரோனா பாதிப்பு: இம்முறை சிக்கிய இராஜபாளையம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் தற்போதைய நிலைமையில்

கொரோனாவை விரட்ட சொந்த கிராமத்தில் கிருமி நாசினி தெளிக்கும் தமிழ்ப்பட ஹீரோ

கொரோனா வைரஸ் பாதிப்பு தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தீவிரமாக இருந்து வரும் நிலையில் மத்திய அரசின் உத்தரவின் அடிப்படையில் தற்போது தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது