ஆம்புலன்ஸில் கொரோனா நோயாளி மரணம்: டிரைவரை அடித்து நொறுக்கிய உறவினர்கள்
- IndiaGlitz, [Friday,July 31 2020]
கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவர் ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற நிலையில் ஆம்புலஸிலேயே அந்த நோயாளி இறந்து விட்டதால் நோயாளியின் உறவினர்கள் ஆம்புலன்ஸ் டிரைவரை அடித்து நொறுக்கிய சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெங்களூரில் உள்ள சதாசிவ நகர் என்ற பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் ஒருவருக்கு கொரோனா நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அங்கு உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றுக்கு தகவல் கொடுத்து ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கும்படி போன் செய்தனர்.
ஆம்புலன்ஸ் குறிப்பிட்ட நேரத்தில் அவர்களது வீட்டிற்கு வந்து உள்ளது. உடனடியாக கொரோனா நோயாளியும் அவரது உறவினர்களும் அந்த ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு சென்றனர். இந்த மருத்துவமனையில் படுக்கை காலியாக இல்லாததால் மருத்துவமனை முன்பு சில நிமிடங்கள் காக்க வைக்கும் நிலை ஏற்பட்டது.
இந்த நேரத்தில் ஆம்புலன்சில் ஆக்சிஜன் வசதி இல்லாத காரணத்தினால் கொரோனா நோயாளி ஆம்புலன்சில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மரணமடைந்துவிட்டார். இதனால் நோயாளியின் உறவினர்கள் ஆம்புலன்சில் ஏன் ஆக்சிஜன் வசதியை வைக்கவில்லை என்று கூறி டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் டிரைவரை அடித்து உதைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
அதன் பின்னர் ஆம்புலன்ஸ் டிரைவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் மறைந்த கொரோனா நோயாளியின்உறவினர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ಕೊರೊನಾ ವಾರಿಯರ್ ಆ್ಯಂಬುಲೆನ್ಸ್ ಚಾಲಕನ ಮೇಲೆ ಬೆಂಗಳೂರಿನ ಎಂಎಸ್ ರಾಮಯ್ಯ ಆಸ್ಪತ್ರೆಯ ಆವರಣದಲ್ಲಿ ಹಲ್ಲೆ ಮಾಡಿರೋದು ಅಮಾನವೀಯ ವರ್ತನೆ. ಪ್ರಾಣವನ್ನು ಲೆಕ್ಕಿಸದೇ 108 ಚಾಲಕ ಆಸ್ಪತ್ರೆಗೆ ದಾಖಲಿಸಲು ರೋಗಿಯನ್ನು ಕರೆ ತಂದರೆ ಈ ರೀತಿ ಹಲ್ಲೆ ಹಲ್ಲೆ ಮಾಡಿರೋದು ಸರಿಯಲ್ಲ. 1/2 pic.twitter.com/jK5HqiQL0C
— Dr Sudhakar K (@mla_sudhakar) July 30, 2020