'சென்னையில் ஒரு நாள்' பாணியில் ஒரு செம்மையான த்ரில் சம்பவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னையில் ஒரு நாள்' திரைப்படத்தில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு இதயமும் கொண்டு செல்லும் காட்சிகளை பார்த்திருக்கிறோம். அதேபோல் தமிழகத்தில் உள்ள தேனியில் இருந்து கோவைக்கு இரண்டு மாத குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு சென்ற த்ரில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது
கோவையை சேர்ந்த ஆனந்தசாமி ஆர்த்தி தம்பதிக்கு இரண்டு மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தையுடன் தேனியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு ஆனந்தசாமி ஆர்த்தி தம்பதி அழைத்து சென்றனர். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தேனி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தை சேர்க்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனை அடுத்து சின்னமனூர் ஆம்புலன்ஸ் உரிமையாளர் சதீஷ் குமார் என்பவர் திருச்சூரில் இருந்து இன்குபேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்ஸ்ஸை ஏற்பாடு செய்தார். அதுமட்டுமின்றி அவரும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரும் குழந்தை உடன் சென்றார்கள்
ஆம்புலன்சை ஜாபர் அலி என்பவர் ஓட்டிச் செல்ல பாலக்காட்டைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர் ஒருவரும் உடன் சென்றுள்ளார். இந்த ஆம்புலன்ஸ் பிற்பகல் 3.15 மணிக்கு தேனியில் இருந்து புறப்பட்டது. செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணம் தாமதம் ஏற்படாமல் இருக்க வாட்ஸ் அப் மூலம் தகவல் அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மூலம் தமிழ்நாடு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என்ற வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டது. இந்த தகவல் சுற்றுலா டிரைவர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டது. இதைப்பார்த்த ஆம்புலன்ஸ் மற்றும் சுற்றுலா வாகன டிரைவர்கள் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சீரமைத்தனர்
இந்த ஆம்புலன்ஸ்க்கு முன்பாக அந்தந்த பகுதியை சேர்ந்த சில ஆம்புலன்ஸ் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து பயணம் தடைபடாமல் இருக்க வழி செய்தனர். 'சென்னையில் ஒரு நாள்' சினிமா காட்சியை மிஞ்சும் அளவுக்கு இந்த பயணம் அமைந்தது. நெடுஞ்சாலை ரோந்து வாகனமும் குழந்தை சென்ற ஆம்புலன்ஸ்க்கு முன்பாக பயணம் செய்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியது. வழக்கமான வேகத்தில் சென்று இருந்தால் ஐந்து மணி நேரத்துக்கும் மேல் ஆகும் பயணம் வெறும் 3 மணி நேரத்தில் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த ஆம்புலன்ஸ் சரியாக 5.45 மணிக்கு கோவை தனியார் மருத்துவமனையை சென்றடைந்தது. சுமார் 240 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 2.55 மணி நேரத்தில் கடந்தது. அதன்பின்னர் உயிருக்கு போராடிய குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்
சிகிச்சைக்கு பின் குழந்தை தற்போது பொது வார்டுக்கு மாற்றப்பட்டு நல்ல நிலையில் இருப்பதாக குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்த பயணத்துக்கு உறுதுணையாக இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சுற்றுலா வாகன டிரைவர்கள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் தனது நன்றியை குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர்
சென்னையில் ஒரு நாள்' படத்தில் ஒரு ஒட்டுமொத்த காவல் துறையே இணைந்து ஆம்புலன்ஸ் செல்ல வழிவகை செய்யும். ஆனால் இரண்டு மாத குழந்தைக்காக வாட்ஸ்அப் குழுவின் மூலம் சுற்றுலா வேன் டிரைவர்கள் மட்டும் ஆம்புலன்ஸ் டிரைவர்களே போக்குவரத்தை ஒழுங்கு செய்தது பெரும் பாராட்டுக்குரியதாக கருதப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் சமூக இணையதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout