'சென்னையில் ஒரு நாள்' பாணியில் ஒரு செம்மையான த்ரில் சம்பவம்

  • IndiaGlitz, [Monday,August 05 2019]

சென்னையில் ஒரு நாள்' திரைப்படத்தில் சென்னையிலிருந்து பெங்களூருக்கு இதயமும் கொண்டு செல்லும் காட்சிகளை பார்த்திருக்கிறோம். அதேபோல் தமிழகத்தில் உள்ள தேனியில் இருந்து கோவைக்கு இரண்டு மாத குழந்தையை சிகிச்சைக்காக கொண்டு சென்ற த்ரில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது

கோவையை சேர்ந்த ஆனந்தசாமி ஆர்த்தி தம்பதிக்கு இரண்டு மாத குழந்தை ஒன்று உள்ளது. இந்த குழந்தையுடன் தேனியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டிற்கு ஆனந்தசாமி ஆர்த்தி தம்பதி அழைத்து சென்றனர். அப்போது திடீரென குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தேனி அரசு மருத்துவமனையில் அந்த குழந்தை சேர்க்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனையில் சேர்க்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தினர். இதனை அடுத்து சின்னமனூர் ஆம்புலன்ஸ் உரிமையாளர் சதீஷ் குமார் என்பவர் திருச்சூரில் இருந்து இன்குபேட்டர் வசதி கொண்ட ஆம்புலன்ஸ்ஸை ஏற்பாடு செய்தார். அதுமட்டுமின்றி அவரும், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவர் ஒருவரும் குழந்தை உடன் சென்றார்கள்

ஆம்புலன்சை ஜாபர் அலி என்பவர் ஓட்டிச் செல்ல பாலக்காட்டைச் சேர்ந்த மருத்துவ உதவியாளர் ஒருவரும் உடன் சென்றுள்ளார். இந்த ஆம்புலன்ஸ் பிற்பகல் 3.15 மணிக்கு தேனியில் இருந்து புறப்பட்டது. செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி பயணம் தாமதம் ஏற்படாமல் இருக்க வாட்ஸ் அப் மூலம் தகவல் அளிக்கப்பட்டது. முதல்கட்டமாக ஆம்புலன்ஸ் டிரைவர்கள் சிலருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மூலம் தமிழ்நாடு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என்ற வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டது. இந்த தகவல் சுற்றுலா டிரைவர்களுக்கான வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்டது. இதைப்பார்த்த ஆம்புலன்ஸ் மற்றும் சுற்றுலா வாகன டிரைவர்கள் ஆங்காங்கே நின்று போக்குவரத்தை சீரமைத்தனர்

இந்த ஆம்புலன்ஸ்க்கு முன்பாக அந்தந்த பகுதியை சேர்ந்த சில ஆம்புலன்ஸ் ஒலி பெருக்கி மூலம் அறிவிப்பு செய்து பயணம் தடைபடாமல் இருக்க வழி செய்தனர். 'சென்னையில் ஒரு நாள்' சினிமா காட்சியை மிஞ்சும் அளவுக்கு இந்த பயணம் அமைந்தது. நெடுஞ்சாலை ரோந்து வாகனமும் குழந்தை சென்ற ஆம்புலன்ஸ்க்கு முன்பாக பயணம் செய்து போக்குவரத்தை ஒழுங்கு படுத்தியது. வழக்கமான வேகத்தில் சென்று இருந்தால் ஐந்து மணி நேரத்துக்கும் மேல் ஆகும் பயணம் வெறும் 3 மணி நேரத்தில் முடிந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது இந்த ஆம்புலன்ஸ் சரியாக 5.45 மணிக்கு கோவை தனியார் மருத்துவமனையை சென்றடைந்தது. சுமார் 240 கிலோ மீட்டர் தூரத்தை சுமார் 2.55 மணி நேரத்தில் கடந்தது. அதன்பின்னர் உயிருக்கு போராடிய குழந்தையை அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர்

சிகிச்சைக்கு பின் குழந்தை தற்போது பொது வார்டுக்கு மாற்றப்பட்டு நல்ல நிலையில் இருப்பதாக குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர். இந்த பயணத்துக்கு உறுதுணையாக இருந்த ஆம்புலன்ஸ் டிரைவர்கள், சுற்றுலா வாகன டிரைவர்கள் மற்றும் காவல்துறையினர் அனைவருக்கும் தனது நன்றியை குழந்தையின் பெற்றோர்கள் தெரிவித்தனர்

சென்னையில் ஒரு நாள்' படத்தில் ஒரு ஒட்டுமொத்த காவல் துறையே இணைந்து ஆம்புலன்ஸ் செல்ல வழிவகை செய்யும். ஆனால் இரண்டு மாத குழந்தைக்காக வாட்ஸ்அப் குழுவின் மூலம் சுற்றுலா வேன் டிரைவர்கள் மட்டும் ஆம்புலன்ஸ் டிரைவர்களே போக்குவரத்தை ஒழுங்கு செய்தது பெரும் பாராட்டுக்குரியதாக கருதப்படுகிறது. அவர்கள் அனைவருக்கும் சமூக இணையதளத்தில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

More News

தளபதியின் அழைப்புக்காக காத்திருக்கின்றேன்: எச்.வினோத்

'சதுரங்க வேட்டை' மற்றும் 'தீரன் அதிகாரம் ஒன்று' ஆகிய இரண்டு படங்கள் மூலம் கோலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்திய இயக்குனர் எச்.வினோத்,  

சாண்டியின் இன்னொரு முகத்தை சேனல் மறைக்கின்றது: கஸ்தூரி குற்றச்சாட்டு

பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான சாண்டி இதுவரை முதல் வாரத்திலிருந்து எந்த வாரத்திலும் நாமினேஷனில் சிக்கவில்லை. அவரை யாரும் இதுவரை நாமினேஷன் செய்ததாகவும் தெரியவில்லை

விஷாலின் அடுத்த படத்தில் 'வேதாளம்' வில்லன்!

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருவது தெரிந்ததே.

ரஜினி குறித்த சர்ச்சைக்குரிய காட்சி" 'கோமாளி' பட தயாரிப்பாளரின் அதிரடி முடிவு

ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' திரைப்படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படத்தில் ரஜினிகாந்த் குறித்த சர்ச்சைக்குரிய காட்சி ஒன்று இருப்பதை அறிந்த ரஜினி ரசிகர்கள்

விஜய்சேதுபதியின் 'துக்ளக் தர்பாரில்' இணைந்த இளம் நடிகை!

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் அரசியல் த்ரில் திரைப்படமான 'துக்ளக் தர்பார்' என்ற திரைப்படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்று, படப்பிடிப்பும் தொடங்கியது என்பதை ஏற்கனவே பார்த்தோம்.