அம்பிகா, லிவிங்ஸ்டன் வாரிசுகள் இணையும் புதிய தமிழ்ப்படம்
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த 80கள் மற்றும் 90களில் சிவாஜி, கமல், ரஜினி, பிரபு, சத்யராஜ் உள்பட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை அம்பிகா. அதே காலகட்டத்தில் ஹீரோ மற்றும் குணசித்திர நடிகராகவும் இயக்குனர் மற்றும் கதாசிரியராகவும் இருந்தவர் நடிகர் லிவிங்ஸ்டன். இந்த நிலையில் தற்போது இருவரது வாரிசுகளும் இணையும் படம் ஒன்று தயாராகி வருகிறது
நடிகை அம்பிகாவின் மகன் ராம்கேசவ் கதாநாயகனாக அறிமுகமாகும் 'கலாசல்' என்ற படத்தின் நாயகியாக நடிகர் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா அறிமுகமாகிறார். இந்த படத்தில் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா உள்பட பலர் நடிக்கிறார்கள்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் அஸ்வின் மாதவன். இவர் இயக்குனர்கள் சுந்தர்.C, பத்ரி ஆகியோரிடம் உதவியாளராக பணியாற்றியவர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற 9ம் தேதி பழனியில் துவங்கி, கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ஒரே கட்டத்தில் நடைபெற உள்ளது. இந்த படம் பற்றி இயக்குனர் அஸ்வின் மாதவன் கூறியதாவது:
சினிமாவில் சாதனை புரிந்த பிரபல நடிகை அம்பிகாவின் மகன், இயக்குனர், நடிகர், கதாசிரியர் என்று பல அவதாரம் எடுத்த லிவிங்ஸ்டன் மகள் இருவரையும் வைத்து முதல் படம் இயக்குவதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
படத்தின் கதையை ஒரு வரியில் சொல்லவேண்டுமானால் இப்படியும் சொல்லலாம்.. மனிதனின் தேவைகள் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது. கடவுள்கிட்ட வேண்டிகிட்டு நமக்கு தேவை இல்லை என்று நினைக்கிற விஷயங்களை காணிக்கையாக செலுத்தி விட்டு. வேண்டியதை கேட்டு பெறுவது பண்டம்மாற்று முறை மாதிரியான ஒரு வியாபாரம் தான்.
நாம வேண்டாம் என்று செலுத்துகிற காணிக்கை விஷயங்கள் கார்பரேட் முதலாளிகளால் அப்பாவி மக்கள் மீது எப்படியெல்லாம் திணிக்கப்பட்டு வியாபாரமாக்கப்படுகிறது என்பதுதான் இந்த படத்தின் கதை என்றார் இயக்குனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout