அம்பாசமுத்திரத்தை சென்னைக்கு கொண்டு வந்த செல்வராகவன்

  • IndiaGlitz, [Monday,February 19 2018]

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் 'சூர்யா 36' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் படக்குழுவினர் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்புக்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் நகரத்தை சென்னையில் செட் போட்டுள்ளனர். ரூ.3 கோடி செலவில் கலை இயக்குனர் ஆர்.கே.விஜயமுருகன் இந்த செட்டை போட்டு ஒரிஜினல் அம்பாசமுத்திரத்தை சென்னைக்கு கொண்டு வந்துள்ளார். 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 23 நாட்கள் இரவுபகலாக பணி செய்து இந்த செட்டை அமைத்துள்ளனர். அம்பாசமுத்திரம் கோவில், வீதிகள் மற்றும் பச்சைப்பசேல் புல்வெளிகள் என நிஜ அம்பாசமுத்திரம் போல் அமைந்துள்ள இந்த செட்டில் சுமார் 20 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

இந்த படப்பிடிப்பில் சூர்யா, ரகுல் ப்ரித்திசிங், சாய்பல்லவி உள்பட முக்கிய நடிகர்கள் பங்கேற்கவிருப்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பை ஒரிஜினல் அம்பாசமுத்திரத்தில் நடத்துவது சாத்தியமில்லை என்பதால் செட் போடப்பட்டதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.