ஹாலிவுட் படத்தில் இருந்து இதுவும் காப்பியா? அம்பானி மருமகளின் திருமண உரை வீடியோ வைரல்..!

  • IndiaGlitz, [Wednesday,March 13 2024]

சமீபத்தில் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடந்த நிலையில் இந்த திருமணத்தில் மணமக்கள் பேசிய உரையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது என்பது தெரிந்தது. குறிப்பாக ஆனந்த் அம்பானி மிகவும் உணர்ச்சி வசப்பட்டு சென்டிமென்ட் ஆக பேசியபோது முகேஷ் அம்பானி ஆனந்தக் கண்ணீர் விட்டார் என்பதும் அவருக்கு அருகில் இருந்தவர்கள் ஆறுதல் கூறினார் என்பதையும் திருமண வீடியோவில் பார்த்து இருக்கலாம்.

இந்த நிலையில் முகேஷ் அம்பானியின் மருமகள் ராதிகா மெர்ச்சன்ட் பேசிய வீடியோ தான் தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது. அவரது உரையில், ’ஒரு திருமணத்தில் நல்லது கெட்டது என எல்லாவற்றையும் பற்றி அக்கறை எடுத்துக் கொள்வதாக ஒருவருக்கு உறுதி அளிக்கிறீர்கள், உங்கள் இணையிடம் நீங்கள் அவரது வாழ்க்கைக்கு சாட்சி அளிப்பதாக உறுதி அளிக்கிறீர்கள்’ என்று பேசி இருந்தார்.

அவரது இந்த பேச்சுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது அவர் பேசிய வசனம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படமான ’ஷல் வி டான்ஸ்’ என்ற படத்தில் ஒரு வார்த்தை கூட மாறாமல் இடம் பெற்று இருந்தது என்பது தெரிய வருகிறது.

ஆனால் அதே நேரத்தில் ராதிகா மெர்ச்சன்ட் தனது உரையில் இதை யாரோ சொன்னதாக தான் கேள்விப்பட்டேன் என்று தான் பதிவு செய்திருந்தார் என்ற நிலையில் அவருக்கு ஆதரவாகவும் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் ஹாலிவுட் படத்திலிருந்து இதுவரை காப்பி அடித்து திரைப்படங்கள் தான் எடுக்கப்பட்டு வருகிறது, ஆனால் தற்போது மணமகளே ஹாலிவுட் படத்தின் வசனத்தை காப்பி அடித்து பேசியுள்ளார் என்று சிலர் கிண்டல் செய்து வருகின்றனர்.