முகேஷ் அம்பானி வாங்கிய 13 கோடி சொகுசு கார்… என்ன ஸ்பெஷல் தெரியுமா?

இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் முதல்இடத்தில் இருந்துவரும் முகேஷ் அம்பானி சமீபத்தில் உலகப் பணக்காரர்களின் வரிசைக்கு செல்லும் அளவிற்கு தனது சொந்துமதிப்புகளை அதிகரித்து வைத்திருக்கிறார். இவர் மிகப்பெரிய ஒரு தொழில் நிறுவனர் என்பதையும் தாண்டி ஒரு கார் பிரியர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.

மேலும் தான் சேகரித்து வைத்திருக்கும் கார்களை வைப்பதற்காகவே முகேஷ் அம்பானி “ஜியோ கேரேஜ்“ எனும் பெயரில் ஒரு கேரஜ் ஒன்றையும் ஏற்படுத்தி வைத்துள்ளார். அவருடைய சேகரிப்பில் ஏற்கனவே ரோவர் டிஃபெண்டர் 110, 5 இருக்கைக் கொண்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டரி போன்ற பல சொகுசு கார்கள் இருக்கின்றன.

இந்நிலையில் அவர் சூப்பர் சார்ஜ்டு வி8 என்ஜின் கொண்ட ரோல்ஸ் ராயல்ஸ் எஸ்யூவி காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 13 கோடி மதிப்புள்ள இந்தக் காரில் 6.2 லிட்டர் வி8 என்ஜின் காடிலாக் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 420 பிஎச்பி மற்றும் 624 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி இறக்குமதி செய்திருக்கும் புதிய கார் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

More News

மாஸ்க் போட்டுக்கொண்டு எப்படி சாப்பிடுவது? அசத்தலான புதிய கண்டுபிடிப்பு!

கடந்த 2 வருடங்களாக மாஸ்க், சானிடைசர், சமூக இடைவெளி போன்ற

ஒரே நாளில் அம்பானி, அதானிக்கும் கீழே சரிந்த ஃபேஸ்புக்கின் மார்க் ஜுக்கர்பெர்க்… நடந்தது என்ன?

உலகளவில் டிஜிட்டல் சேவையில் முன்னணியில் இருந்துவரும் ஃபேஸ்புக்கின்

லதா மங்கேஷ்கரின் உடல்நிலை குறித்து அதிர்ச்சி தகவல்!

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விஜய்-புதுவை முதல்வர் சந்திப்பின் புகைப்படங்கள் வைரல்!

தளபதி விஜய்யை நேற்று புதுவை முதல்வர் ரங்கசாமி அவரது வீட்டில் சந்தித்தார் என்பதும் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று இரு தரப்பிலும் கூறப்பட்டது என்பதும் தெரிந்ததே.

'வலிமை' படத்தின் இரண்டாம் பாகமா? போனிகபூர் தகவல்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் 24ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது