முகேஷ் அம்பானி வாங்கிய 13 கோடி சொகுசு கார்… என்ன ஸ்பெஷல் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
இந்தியப் பணக்காரர்களின் பட்டியலில் முதல்இடத்தில் இருந்துவரும் முகேஷ் அம்பானி சமீபத்தில் உலகப் பணக்காரர்களின் வரிசைக்கு செல்லும் அளவிற்கு தனது சொந்துமதிப்புகளை அதிகரித்து வைத்திருக்கிறார். இவர் மிகப்பெரிய ஒரு தொழில் நிறுவனர் என்பதையும் தாண்டி ஒரு கார் பிரியர் என்பது பலருக்கும் தெரிந்திருக்கும்.
மேலும் தான் சேகரித்து வைத்திருக்கும் கார்களை வைப்பதற்காகவே முகேஷ் அம்பானி “ஜியோ கேரேஜ்“ எனும் பெயரில் ஒரு கேரஜ் ஒன்றையும் ஏற்படுத்தி வைத்துள்ளார். அவருடைய சேகரிப்பில் ஏற்கனவே ரோவர் டிஃபெண்டர் 110, 5 இருக்கைக் கொண்ட லேண்ட் ரோவர் டிஃபெண்டரி போன்ற பல சொகுசு கார்கள் இருக்கின்றன.
இந்நிலையில் அவர் சூப்பர் சார்ஜ்டு வி8 என்ஜின் கொண்ட ரோல்ஸ் ராயல்ஸ் எஸ்யூவி காரை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட 13 கோடி மதிப்புள்ள இந்தக் காரில் 6.2 லிட்டர் வி8 என்ஜின் காடிலாக் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 420 பிஎச்பி மற்றும் 624 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் எனவும் கூறப்படுகிறது. முகேஷ் அம்பானி இறக்குமதி செய்திருக்கும் புதிய கார் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com