கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை புத்தகத்தை ஆர்டர் செய்த நபருக்கு அமேசான் கொடுத்த அதிர்ச்சி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும்போது சில தவறுகள் நடப்பது சகஜம்தான். ஆனால் அமேசான் இப்படி விஷமத்தில் ஈடுபட்டு இருக்கக்கூடாது எனச்சொல்லும் படி ஒரு காரியத்தை செய்திருக்கிறது. கொல்கத்தாவை சேர்ந்த சுதிர்த்தா தாஸ் என்பவர் உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கம்யூனிஸ்ட் மெனிபேஸ்ட்ரோ எனப்படும் கம்யூனிஸ் கட்சி அறிக்கை புத்தகத்தை அமேசானில் ஆர்டர் செய்து இருந்தார். ஜுன் 10 ஆம் தேதி ஆர்டர் கொடுத்தவருக்கு சில தினங்களுக்குப் பின்பு புத்தகம் வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை டெலிவரி செய்யப்படும் என்ற குறுஞ்செய்தியும் அனுப்பப்பட்டது.
இப்படி குறுஞ்செய்தி அனுப்பியப் பின்பு அந்த நிறுவனம் சுதிர்த்தா தாஸை தொடர்பு கொண்டு உங்கள் ஆர்டரை நாங்கள் தவறுதலாக மாற்றி அனுப்பி விட்டோம். ஒருவேளை உங்களுக்கு புத்தகம் டெலிவரி ஆனால் அதைத் திருப்பி அனுப்பி விடுங்கள் என்று தகவல் கொடுக்கப்பட்டது. சரி என்று சுதிர்த்தா தாஸ் அப்படி என்ன அனுப்பியிருப்பார்கள் என்ற ஆராய்ச்சியில் எல்லாம் ஈடுபடவில்லை. அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்ற போது டெலிவரி ஆகி புத்தகம் டேபிளில் கிடந்தது. அதைப் பார்த்தவுடன் ஆர்வமாக திறந்து பார்த்தவருக்கு சிரிப்பும் ஒருபக்கம் கோபமும் கண்டிப்பாக வந்திருக்கலாம். கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை எனப்படும் கம்யூனிஸ்ட் மேனிபேஸ்ட்ரோவுக்கு பதிலாக சுருக்கப்பட்ட வடிவத்தில் பகவத் கீதை அனுப்பப் பட்டு இருந்தது.
சுதிர்த்தா தாஸ்க்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தி மற்றும் இன்வாய்ஸ் எல்லா இடங்களிலும் கம்யூனிஸ் மேனிபேஸ்ட்ரோ என்றே குறிப்பிடப்பட்டு இருக்கிறது. ஆனால் வந்திருப்பது பகவத் கீதையின் சுருக்கப்பட்ட வடிவம். தவறுதலாக வேறு எதையோ அனுப்பியிருக்கலாம். அதெப்படி எதிர்மறையான கருத்துள்ள ஒரு புத்தகத்தை அனுப்பியிருக்க முடியும் என்ற சந்தேகம் கூட வரத்தான் செய்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments