கார்த்தி - நலன் குமாரசாமி பட டைட்டிலை உறுதி செய்த ஓடிடி நிறுவனம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு எப்போது?
Send us your feedback to audioarticles@vaarta.com
கார்த்தி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் ’கார்த்தி 26’ என்று கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது என்பதும் தற்போது படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’வா வாத்தியாரே’ என்று கூறப்பட்டாலும் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை என்பதும் இந்த படத்தில் எம்ஜிஆர் ரசிகராக கார்த்தி நடித்ததால் தான் இந்த டைட்டில் வைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
மேலும் சமீபத்தில் இந்த படத்தின் பூஜை வீடியோ வெளியான நிலையில் அதில் சிவகுமார்,சூர்யா, கார்த்தி, ஞானவேல் ராஜா, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பதும் அந்த வீடியோ இணையத்தில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் திரையரங்கு ரிலீசுக்கு பின் ஓடிடி ரிலீஸ் உரிமையை வாங்கி உள்ள அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது இந்த படத்தின் விளம்பரத்தை அறிவித்துள்ளது. அதில் இந்த படத்தின் டைட்டில் ’வா வாத்தியாரே’ என்பதை உறுதி செய்துள்ளது. மேலும் இது குறித்த புகைப்படத்தையும் பதிவு செய்த நிலையில் அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
‘வா வாத்தியாரே’ என்ற டைட்டில் உறுதி செய்யப்பட்டாலும் இந்த டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ego and alter-ego coming together to set your screens on 🔥#VaaVaathiyaar #AreYouReady #PrimeVideoPresents pic.twitter.com/3W4NfGZGxw
— prime video IN (@PrimeVideoIN) March 24, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout