அமேசான் பிரைமில் இருந்து நீக்கப்பட்ட சிவகார்த்திகேயன் படம்
- IndiaGlitz, [Saturday,April 18 2020]
சிவகார்த்திகேயன் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான திரைப்படம் ’ஹீரோ’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது என்பது தெரிந்ததே இந்த நிலையில் விரைவில் இந்த படம் ஒரு முன்னணி தனியார் தொலைக்காட்சியிலும், அமேசான் பிரைமிலும் வெளியாக இருந்தது. ஆனால் தற்போது திடீரென இந்த படம் அமேசான் பிரைம் லிஸ்ட்டில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
’ஹீரோ’ திரைப்படம் வெளியாகும்போது இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் சங்கத்தில் போஸ்கோ என்பவர் புகார் செய்தார். இயக்குனர் அட்லியின் உதவியாளரான இவருடைய புகாரை விசாரணை செய்த எழுத்தாளர் சங்க தலைவர் கே.பாக்யராஜ் இந்த படத்தின் கதை ’ஹீரோ’ படத்தின் கதையை ஒட்டி இருப்பதால் 'ஹீரோ’ இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுத்தார். ஆனால் இந்த அழைப்பை பிஎஸ் மித்ரன் நிராகரித்ததை அடுத்து போஸ்கோ சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
ஆனால் இந்த வழக்கு முடிவதற்குள் ’ஹீரோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி விட்டது. இதனை அடுத்து இந்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வந்தபோது, ‘ஹீரோ’திரைப்படத்தைன் கதை போஸ்கோவின் கதையை ஒட்டி உள்ளது என்பது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து சாட்டிலைட் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி பிளாட்பாரங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதனை அடுத்து அமேசான் ப்ரைம் இந்த படத்தை தனது லிஸ்டில் இருந்து நீக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.