'மாஸ்டர்' விரைவாக வெளியிட அமேசான் கொடுத்த கோடிகள் எவ்வளவு?

  • IndiaGlitz, [Friday,January 29 2021]

தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் கடந்த 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் வெளியானது. இந்த திரைப்படம் ஒரே வாரத்தில் ரூபாய் 100 கோடியும் இரண்டாவது வாரத்தில் ரூபாய் 200 கோடியும் உலகம் முழுவதும் வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன

இந்த நிலையில் இந்த திரைப்படம் அனைத்து திரையரங்குகளிலும் நல்ல வசூலை கொடுத்துக் கொண்டிருந்த நிலையில் திடீரென இன்று அதிகாலை முதல் ஓடிடியில் வெளியானது. அமேசான் பிரைமில் இந்த திரைப்படம் வெளியானதை அடுத்து பலர் இந்த திரைப்படத்தை வீட்டிலிருந்தே கண்டு ரசித்து வருகின்றனர்

இந்த நிலையில் அமேசான் பிரைமில் ’மாஸ்டர்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இரண்டு மாதங்களுக்கு பின்னரே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமேசான் நிறுவனம் கூடுதலாக 15.5 கோடி கொடுத்ததால் தற்போது வெளிவந்து உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

இதனை அடுத்து ’மாஸ்டர்’ திரைப்படத்திற்காக அமேசான் நிறுவனம் தயாரிப்பாளருக்கு மொத்தம் 36 கோடி கொடுத்துள்ளதாகவும் இதில் 15.5 கோடி தற்போது கொடுக்கப்பட்ட கூடுதலான தொகை என்றும் கூறப்படுகிறது

’மாஸ்டர்’ இன்று ஓடிடியில் ரிலீஸ் ஆனதால் தயாரிப்பாளருக்கு கூடுதலாக 36 கோடி கிடைத்துள்ளது என்ற தகவல் கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

More News

கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கிடம் இப்படி ஒரு திறமையா? வைரல் புகைப்படம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரர் தினேஷ் கார்த்திக் தனது டிவிட்டரில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் கேபிக்கு கிடைத்த முதல் வாய்ப்பு!

106 நாள்களாக நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் இந்த நிகழ்ச்சியின் வின்னர் ஆக ஆரியும், ரன்னராக பாலாஜியும் தேர்வு பெற்றனர் என்பது தெரிந்ததே

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பில் உலக அழகி… வைரலாகும் செல்பி!

இந்தியாவில் இருந்து பல உலக அழகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டாலும் இந்திய ரசிகர்ளை பொறுத்த வரையில் உலக அழகி என்றால் அது ஒரு முகம்தான், அவர்தான் ஐஸ்வர்யா ராய் பச்சன்

சசிகலாவிடம் ஏதோ சிறப்பம்சம் இருக்கின்றது: தமிழ் நடிகர்

சசிகலா குறித்து அனைவரும் பேசுவதை பார்க்கும்போது அவரிடம் ஏதோ ஒரு சிறப்பு அம்சம் இருப்பதை காண்பிப்பதாக தமிழ் நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு முழு உருவச்சிலை.. முதல்வர் திறந்து வைத்து மரியாதை!

மறைந்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி ஆண்டுதோறும் அரசு விழாவாகக் கொண்டாடப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு வெளியிட்டார்.