தளபதி 64: சாட்டிலைட் உரிமையை அடுத்து டிஜிட்டல் உரிமை வியாபாரமும் முடிந்தது

  • IndiaGlitz, [Thursday,December 05 2019]

தளபதி விஜய் நடித்து வரும் ’தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்த நிலையில் அதற்குள் இந்த படத்தின் வியாபாரம் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது

தளபதி 64 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன்டிவி மிகப்பெரிய தொகை ஒன்றுக்கு பெற்றுள்ளதாக ஏற்கனவே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது பார்த்தோம். இந்த நிலையில் தற்போது சேட்டிலைட் உரிமையின் வியாபாரமும் முடிந்து விட்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளது

’தளபதி 64’ படத்தின் டிஜிட்டல் உரிமையை அமேசான் நிறுவனம் இதுவரை இல்லாத மிகப்பெரிய தொகைக்கு பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது

விஜய், மாளவிகா மேனன், விஜய்சேதுபதி, ஆண்ட்ரியா, சாந்தனு, ஆண்டனி வர்கீஸ், சஞ்சீவ், ஸ்ரீமான், ரம்யா, கெளரி கிஷான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவில், பிலோமினா ராஜ் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ தயாரித்து வருகிறார். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது

More News

நான் வெங்காயம்,பூண்டெல்லாம் சாப்பிடுவதில்லை.. வெங்காய விலையேற்றம் பற்றிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

இந்நிலையில் மக்களவையின் கேள்வி நேரத்தின் போது பேசிய காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

உத்திரபிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பள்ளி மாணவி.நான்கு சி.ஆர்.பி.எப் வீரர்கள் கைது.

உத்தரபிரதேச மாநிலத்தில் சி.ஆர்.பி.எப் வீரர்களால் 15 வயதே ஆன பள்ளி மாணவி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தளபதி சொன்னது போல் இதனை டிரெண்ட் செய்யுங்கள்: பிகில் பட நடிகை கோரிக்கை

சமீபத்தில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படமான விஜய்யின் 'பிகில்' படத்தின் ஆடியோ விழாவின்போது 'நல்ல விஷயங்களை சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் செய்யுங்கள்,

ஷூவுக்குள் பாம்பு: சென்னை பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

சென்னை கேகே நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் ஷூவுக்குள் பாம்பு இருப்பதை கவனிக்காமல் அதனை சுத்தம் செய்ததால் பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார்

பிரியங்கா ரெட்டி கொலை எதிரொலி: மெட்ரோ ரயில்வே நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு

தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் சமீபத்தில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி என்பவர் நான்கு பேர்களால் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம்