8 இன்ச் டிஸ்ப்ளேவுடன் வெளியாகிறது அமேசான் எஃகோ ஷோ 8..!
Send us your feedback to audioarticles@vaarta.com
Amazon Echo Show 8 கடந்த ஆண்டு செப்டம்பரில் உலகளவில் எக்கோ-பிராண்டட் சாதனங்களான Echo Buds மற்றும் Echo Frames-களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது.இப்போது இது இந்தியாவில் வெளியிடப்பட இருக்கிறது. இந்த சாதனம் 8-இன்ச் எச்டி-தெளிவுதிறன் தொடுதிரை ,இரண்டு அங்குல நியோடைமியம் ஸ்பீக்கர்கள், மற்றும் பாஸ் ரேடியேட்டரும் கொண்டு உள்ளது. மற்ற எக்கோ சாதனங்களைப் போலவே, Echo Show 8, இணையத்துடன் வைஃபை மூலம் இணைகிறது. மேலும், அமேசான் நிறுவனத்தின் குரல் உதவியாளரான அலெக்சாவும் உள்ளது.
குரல் உதவி, தகவல், இணைக்கப்பட்ட சேவைகள் மூலம் இசை ஸ்ட்ரீமிங் மற்றும் தகவல் தொடர்பு உள்ளிட்ட அலெக்சா திறன்களின் முழு தொகுப்பையும் பெறலாம். கேமரா இருப்பதால், வீடியோ அழைப்புகளுக்கும் Echo Show 8-ஐப் பயன்படுத்தலாம். மேலும், பிரபலமான டிராப்-இன் அம்சத்திற்கும் கேமராவைப் பயன்படுத்தலாம். இது பயனர்களை விரைவாகவும், தடையின்றி தங்கள் சொந்த எக்கோ சாதனங்களுடன் இணைக்கவும் உதவுகிறது. முன் கேமராவின் மேல் ஒரு ஷட்டர் ஒன்றும் உள்ளது.
அமேசானின் புதிய சாதனம் இந்தியாவில் Amazon Echo Show 8 என்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.12,999. இந்த சாதனம் இப்போது முன்கூட்டிய ஆர்டர்களுக்கு அறிமுக தள்ளுபடியாக ரூ. 8,999-க்கு கிடைக்கும் மற்றும் பிப்ரவரி 26 அன்று அனுப்பப்படும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Sai Surya
Contact at support@indiaglitz.com