நடிகை கத்ரீனா- விக்கி கௌஷால் திருமண வீடியோ… இந்த ஓடிடி தளத்திற்கு விற்பனையா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பாலிவுட் பிரபல நடிகை கத்ரீனா கைஃப் மற்றும் நடிகர் விக்கி கௌஷால் இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்த நிலையில் நேற்று அவர்களின் திருமணம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் பாலிவுட்டைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்கள் சிலர் மட்டுமே கலந்து கொண்டனர்.
இந்நிலையில் திருமணம் குறித்த சில புகைப்படங்களைத் தவிர வீடியோ எதுவும் வெளியாகவில்லை. இதற்கு முன்பே திருமணத்திற்கு வரும் விஐபிகள் யாரும் தங்களது செல்போன், கேமராவை எடுத்து வரக்கூடாது என நடிகை கத்ரீனா மற்றும் விக்கி கௌஷால் இருவரும் வேண்டுகோள் விடுத்திருந்தனர். இதையடுத்து திருமணம் குறித்த வீடியோ ஒளிப்பரப்பு உரிமை பிரபல ஓடிடி தளத்திற்கு விற்பனை செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் தற்போது நடிகை கத்ரீனா மற்றும் நடிகர் விக்கி கௌஷால் திருமண வீடியோவை அமேசான் பிரைம் ஓடிடி தளம் ரூ.80 கோடிக்கு வாங்கியுள்ளதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இவர்களின் இந்த திருமண வீடியோ அடுத்த மாதம் ஒளிப்பரப்பு செய்யப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.
வெளிநாடுகளில் பிரபலங்கள் தங்களின் திருமண வீடியோ ஒளிப்பரப்பு உரிமையை தனியாரிடம் விற்பனை செய்துவிடுகின்றனர். தற்போது இதே உக்தியைப் பின்பற்றி நடிகை கத்ரீனா மற்றும் நடிகர் விக்கி கௌஷால் இருவரின் திருமண வீடியோ ஒளிப்பரப்பு உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் விலைக்கு வாங்கியுள்ளது.
இதற்கு முன்பு பாலிவுட் பிரபல நடிகை பிரியங்கா சோப்ரா மற்றும் பாடகர் நிக் ஜோனாசின் திருமண வீடியோவை தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று ஒளிப்பரப்பு செய்ததும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments